ஐ.எஸ். ஆயுததாரிகளுக்கு நிகராக அமெரிக்கச் சிப்பாய்கள் அறிவிப்பு

விரைவில் இவ்வாறு செய்வோம் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தது ஈரான்

உலகத்தில் மிகவும் அச்சுறுத்தலான ஆயுதக் குழுவாக உருவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளுக்கு நிகரானவர்களாக அமெரிக்கச் சிப்பாய்களை அறிவித்து நடவடிக்கை எடுப்போம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் இராணுவத்தை ‘தீவிரவாதப் படை’ என்று அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், இதற்குப் பதிலடியாகவே இந்த எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.
பட்டன்னாட்டுச் சட்டத்திட்டங்கள், பன்னாட்டு அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தம் ஆகியவற்றை மீறி ஈரான் அவ்வப்போது ஏவுகணை, அணுவாயுதச் சோதனைகளை நடத்தி வருவதுண்டு. ஈரானின் வரவு செலவுத் திட்டத்தில் அணுவாயுதச் சோதனைக்கு என்றும் பெரும் தொகை நிதி ஒதுக்கப்படும்.

ஈரான் ஏவுகணைச் சோதனைகளை மேற்கொள்ள சமீபகாலமாக பெரும் எடுப்பில் தயாராகி வருகிறது. இதனால் ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. மட்டுமல்லாமல் ஈரானின் இராணுவத்தை ‘தீவிரவாதப் படை’ என்றும் அமெரிக்காவின் தரப்பில் இருந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு ஈரான் இராணுவத் தளபதி அலில் ஜாப்ரி பதிலடி கொடுத்துள்ளார்.

‘எங்கள் நாட்டு இராணுவத்தை தீவிரவாதிகள் என அமெரிக்கா கருதினால், எங்கள் படைகளும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளுக்கு இணையாக அமெரிக்க இராணுவத்தை கருத தொடங்கும்’ என அவர் மேலம் தெரிவித்தார்.

You might also like