சந்திரனுக்கு மனிதனை மீண்டும் அனுப்புகிறது அமெரிக்கா!

அமெரிக்கா சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் ஆராய்ச்சி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்காவின் துணை அதிபர் பென்ஸ் வெளிப்படுத்தினார்.

1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி சந்திரனுக்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்பியது அமெரிக்கா. இதன்படி நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் கால்பதித்த முதலாவது நபர் என்ற பெருமையைப் பெற்றார். அதன் பின்னர் அமெரிக்கா சந்திரனில் ஆய்வு செய்வதை நிறுத்தி விட்டு செவ்வாய்கிரக ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது சந்திரனின் பக்கம் அமெரிக்காவின் பார்வை பலமாகத் திரும்பியுள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் துணை அதிபர் பென்ஸ், ‘நிலாவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டம் மேற்கொள்ள இருக்கிறோம் இந்தமுறை வெறும் கொடியை மட்டும் நட்டிவிட்டு வரும் பயணமாக அது இருக்காது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப இருக்கும் திட்டத்துக்கு இது முன்னோட்டமான பயணம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

தவற விடாதீர்கள்:  அர­புக் கூட்­ட­மைப்பு அமெ­ரிக்­கா­வுக்கு கண்­டனம்!

You might also like