தமிழகத்தின் அழகன்குளத்தில் 13,000 பழங்காலப் பொருள்கள்

தமிழகம் கீழடி அகழாய்வை மிஞ்சும் வகையில், அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13 ஆயிரம் பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அழகன்குளம் ஒரு கடற்கரைக் கிராமம். இந்தக் கிராமம் சங்க காலத்தில் ஒரு வணிகத்தலமாக விளங்கியதை இதற்கு முன் 7 முறை நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.

இங்கு கிடைத்த பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய ஆபரணப் பொருட்கள், சங்கு வளையல்கள், மண்பாண்டங்கள், உரோமானிய மண்பாண்டங்கள் உள்ளிட்ட அரிய வகைப் பொருட்கள் அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 8ஆவது கட்ட அகழ்வாய்வு சமீபத்தில் நடந்து முடிவுக்கு வந்தது.

8ஆம் கட்ட ஆய்வில் இந்தியாவில் முதன் முதலாகப் பயன்படுத்திய 6 வெள்ளி முத்திரை நாணயங்கள், சதுர வடிவில் செப்புக் காசுகள் என 50 நாணயங்கள் கிடைத்துள்ளன. யானைத்தந்தம், கல், சங்கு மணிகளால் ஆன ஆபரணங்கள். யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சுடுமண் பாண்டங்கள், விலை உயர்ந்த கல் மணிகள், சங்கு வளையல்கள், ஆபரணங்கள், பச்சைநிறக் கற்கள், கண்ணாடியால் ஆன மணிகள் என்று சுமார் 13ஆயிரம் பொருட்கள் கிடைத்துள்ளன.

தவற விடாதீர்கள்:  அமெ­ரிக்­கா­வின் முடிவு முற்­றி­லும் தவ­றா­னதே!

You might also like