சேகுவேரா கொல்லப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு கியூபாவில் கடைப்பிடிப்பு

பிரபல மாக்சிசப் புரட்சியாளரான சே குவேரா கொல்லப்பட்ட 50ஆவது ஆண்டு நினைவு தினம் கியூபாவில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சே குவேரா ஆர்ஜென்ரீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு மாக்சிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர். இவர் புரட்சிகளில் ஈடுபட்டதற்காக பொலியாவில் 1967ஆம் ஆண்டு ஒக்ரோபர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு அடுத்த நாள் கொல்லப்பட்டார்.

அவரது உடல் முதலில் பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் புதைக்கப்பட்டது. பின்னர் 1997ஆம் ஆண்டு, அவரது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கியூபாவின் ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடத்தப்பட்டு புதைக்கப்பட்டது. ஆண்டுதோறும் சே குவேரா இறந்த தினத்தை கியூபா மக்கள் மிகவும் உருக்கமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். சே கொல்லப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுதினம் நேற்று பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன.

தவற விடாதீர்கள்:  பிரி­வ­தற்­காக 1,050,000 கோடி ரூபா வழங்க பிரிட்­டன் தயார்!!

You might also like