நாம­லின் முன்­னாள் செய­லர் அபு­தா­பி­யில் கைது

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச மீதான நிதிச் சலவை வழக்­கில் தொடர்­பு­டையவர் என்று குற்­றஞ்­சாட் டப்­ப­டும் இளம்­பெண் அபு­தா­பி­யில் வைத்து அந்த நாட்­டுப் பொலி­ஸா­ரால் நேற்­று­முன் தி­னம் கைது செய்­யப்­பட்­டார்.

நாம­லின் செய­லா­ள­ரா­க­வும் பணி­யாற்­றிய அவர் இன்று இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­ட­வுள்­ளார்.

2013ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் முத­லாம் திக­திக்­கும் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திக­திக்­கும் இடைப்­பட்ட காலத்­தில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்­ச­வுக்கு சொந்­த­மான கவர்ஸ் கோப்­ப­ரேட் சேவி­சஸ் நிறு­வ­னம் சதித்த திட்­டம் தீட்டி கள்ள வழி­யில் 30 மில்­லி­யன் ரூபாவை சம்­பா­தித்­தன் ஊடாக, நிதிச் சல­வைச் சட்­டத்­தின் கீழான குற்­றத்­தைப் புரிந்­தமை அதற்கு உத­வி­ஒத்­தாசை புரிந்­தமை உள்­ளிட்ட 11 குற்­றச்­சாட்­டுக்­க­ளின் கீழ் நாமல் ராஜ­பக்ச உள்­ளிட்ட 6 பேருக்கு எதி­ராக சட்­டமா அதி­ப­ரால் கொழும்பு மேல் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

வழக்­கின் பிர­தி­வா­தி­க­ளா­கப் பெய­ரி­டப்­பட்ட இரு­வர் இல்­லா­ம­லேயே வழக்கு முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. நான்­காம் பிர­தி­வா­தி­யா­கப் பெய­ரி­டப்­பட்ட பட்­ட­பொல ஆரச்­சிகே ஒரெ­னெலா இரோஷ சில்வா, கவர்ஸ் கோப்­ப­ரேட் நிறு­வ­னத்­தின் பங்­கு­தா­ரா­கச் செயற்­பட்­டி­ருந்­தார்.

இவர் மன்­றில் முன்­னி­லை­யா­க­வில்லை. மன்று சிவப்பு அறி­வித்­தல் விடுத்­தது. பன்­னாட்­டுப் பொலி­ஸார் ஊடாக அவர் தேடப்­பட்டு வந்­தார். இந்த நிலை­யி­லேயே அபு­தா­பி­யில் வைத்து அவர் கைது செய்­யப்­பட்­டார்.

இன்­றைய தினம் இந்த வழக்கு கொழும்பு 7ஆம் இலக்க மேல் நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு வர­வுள்ள நிலை­யில் அவர் கொழும்­புக்கு அழைத்து வரப்­ப­டு­வார் என்று தெரி­கி­றது.

You might also like