ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர் எனக்கூறினார் சே குவாரா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர், அவர் உலகத்தையே அழித்து விடுவார் என சே குவாரா மகள், அலெய்டா குவாரா மார்ச் தெரிவித்துள்ளார்.

கியூபாவின் மிகப்பெரிய கம்யூனிச புரட்சியாளரான சே குவேரா-வின் மூத்த மகள் அலெய்டா குவாரா மார்ச். 57 வயதான இவர் ஹவானாவில் வசித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

உலகின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த என் தந்தை மிகவும் அன்பானவர், ஒழுக்கமானவர் என பெயர் பெற்றவர். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்பிடம், அதிகாரங்கள் குவிந்தள்ளதால் அவரிடம் மனசாட்சி துளியும் இல்லை. பைத்தியக்காரத் தன்மை அதிகம் உடைய அவரிடம், அதிகாரம் கிடைத்ததால் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அவரது நடத்தை, மனித குலத்தையே அழித்து விடும் எனவும் அதை தடுப்பதற்கு, நாம் இப்போதே தயாராக வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

மேலும், 1997ல், இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணம் செய்தது தன் வாழ்வில் மறக்க முடியாது அனுபவம் கூறிய அலெய்டா, இந்தியர்கள் நட்புணர்வு மிக்கவர்கள் என்றார்.

தவற விடாதீர்கள்:  அமெ­ரிக்­கா­வின் முடிவு முற்­றி­லும் தவ­றா­னதே!

You might also like