கலிபோர்னியாவில்-காட்டுத்தீ பரவல்

அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தில் மிக வேகமாக காட்டுத் தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த நாட்டு அரசால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தமாநிலத்தில் பரவிய காட்டுத் தீ காரணமாக, இதுவரையில் 10 பேர் உயிரிழந்தாகவும்  பெருமளவான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அத்துடன், எரிகாயங்கள் மற்றும் மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 100 பேர்சி கிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயால் சுமார் ஆயிரத்து 500 உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்தத் தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில், கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவற விடாதீர்கள்:  அமெ­ரிக்­கா­வின் முடிவு முற்­றி­லும் தவ­றா­னதே!

You might also like