Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பொது வாக்கெடுப்பு யதார்த்தம்

நாடு கடந்த தமி­ழீழ அரசு அறிக்கை ஒன்றை விடுத்­தி­ருக்­கி­றது. அதில், இலங்­கை­யின் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்கு ஈழ மற்­றும் புலம்­பெ­யர் நாடு­க­ளில் தமி­ழர்­கள் மத்­தி­யில் கருத்­துக் கணிப்பு ஒன்று நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்­கிற பரப்­பு­ரை­யைத் தான் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப் போவ­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

அண்­மை­யில் ஸ்பெயின் நாட்­டின் கட்­லோ­னியா மாநி­லம் மற்­றும் ஈராக்­கின் குர்­திஷ் மாநி­லம் என்­பன தத்­த­மது நாடு­க­ளில் இருந்து பிரிந்து செல்­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தன.

இதனை அடுத்தே ‘‘கருத்­துக்­க­ணிப்­புக்­காக வாக்­களி’’ என்ற முழக்­கத்­து­டன் நாடு கடந்த தமி­ழீழ அர­சும் பரப்­பு­ரையை ஆரம்­பிக்க உள்­ளது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் அழி­வுக்­குப் பின்­னர் உரு­வாக்­கப்­பட்­டது இந்த நாடு கடந்த தமி­ழீழ அரசு. அமெ­ரிக்­கா­வைத் தள­மா­கக் கொண்­ட­வ­ரான வி.ருத்­தி­ர­கு­மா­ரன் இதன் தலைமை அமைச்­ச­ராக இருக்­கின்­றார்.

ஸ்பெயின் நாட்­டில் இருந்து பிரிந்து சென்று தனி­நா­டா­கப் போவ­ தாக அண்­மை­யில் கருத்­துக் கணிப்பு மூலம் அந்த நாட்­டின் ஒரு மாநி­ல­மான கட்­லோ­னியா அறி­வித்­தது. இந்த வாக்­கெ­டுப்பு ஸ்பெயி­னின் நாட்­டின் அர­ச­மைப்­புக்கு முர­ணா­னது என்று ஸ்பெயின் அர­சும் அந்த நாட்டு உயர் நீதி­மன்­ற­மும் அறி­வித்­ததை அடுத்து பொலி­ஸார் வாக்­க­ளிப்­பைக் குழப்­பிய பின்­ன­ரும் வாக்­க­ளித்த 44 சத­வீத மக்­க­ளில் 92 சத­வீ­தத்­தி­னர் பிரிந்து செல்­வ­தற்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளித்­த­னர்.

அதே­போன்று ஈராக்­கின் குர்­திஷ் மாகா­ணத்­தைச் சேர்ந்த மக்­க­ளும் சுய வாக்­கெ­டுப்பு ஒன்­றின் மூலம் தமது விருப்­ப­மான பிரிந்து செல்­லும் உரி­மையை நிலை­நாட்ட ஆத­ரவு தெரி­வித்து வாக்­க­ளித்­துள்­ள­னர்.

இந்த இரு வாக்­கெ­டுப்­புக்­க­ளுமே பன்­னாட்டு மட்­டத்­தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­வை­யல்ல. இரண்­டுமே விடு­தலை விரும்­பி­க­ளான மக்­க­ளால் தமது விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில் அவர்­க­ளா­லேயே நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்­புத்­தான்.

விடு­தலை விரும்­பி­க­ளான மக்­க­ளுக்கு உற்­சா­கத்­தைத் தரக்­கூ­டிய இந்த இரு வாக்­கெ­டுப்பு முடி­வு­க­ளின் பின்­னரே அது­போன்­ற­தொரு கருத்­துக்­க­ணிப்­புக்­கான முனைப்பை நாடு கடந்த தமி­ழீழ அர­சும் எடுத்­துள்­ளது. தனி­நா­டா­கப் பிரிந்து செல்­வதா இல்­லையா என்ற நேர­டி­யான கேள்­விக்கு ஆம் அல்­லது இல்லை என்று பதி­ல­ளிப்­ப­தன் மூலமே கட்­ட­லோ­னியா மற்­றும் குர்­திஷ் மக்­கள் தமது கருத்தை வெளிப்­ப­டுத்­தி­னர்.

ஆனால், நாடு கடந்த தமி­ழீழ அர­சின் பரப்­புரை என்­பது அத்­த­கைய ஒரு கருத்­துக்­க­ணிப்­புக்கு வச­தி­யான காலம் கனி­யும் வரை­யும் விடு­தலை வேட்­கை­யைத் தூண்டி வைத்­தி­ருக்­கும் ஒரு முயற்­சியே என்று அது தெரி­வித்­துள்­ளது.

‘‘இலங்­கை­யின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­யற்­தீர்­வா­கத் தமி­ழீ­ழத் தனி­ய­ரசு உட்­பட்ட தீர்­வுத்­திட்­ட­முன்­மொ­ழி­வு­கள் தமி­ழீழ மக்­க­ளின்­முன்­வைக்­கப்­பட்டு, அவற்­றி­னி­டையே பொது­வாக்­கெ­டுப்­பின் மூலம் மக்­கள் வெளிப்­ப­டுத்­தும் ஜன­நா­யக முடி­வுக்கு ஏற்ப அர­சி­யற்­தீர்வு காணப்­ப­ட­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டுக்கு அனைத்­து­லக ஆத­ர­வி­னைத் திரட்­டும் பணி­யினை இந்த அர­சி­யற்­ப­ரப்­புரை இயக்­கம் மேற்­கொள்­ளும்’’ என்று நாடு கடந்த தமி­ழீழ அர­சின் தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கம் விடுத்த அறிக்கை கூறு­கின்­றது.

‘‘அண்­மை­யில் நடை­பெற்று முடிந்த குர்­திஷ், கட்­ட­லோ­னியா பொது­மக்­கள் வாக்­கெ­டுப்­பு­கள் (Referendum) நமக்கு ஒரு தெளி­ வான செய்­தி­யி­னைத் தெரி­விக்­கின்­றன.

விடு­த­லைக்கு அவா­வும் மக்­களே அதற்­கான பொறி­மு­றை­யை­யும் கையி­லெ­டுத்து தமது சுதந்­திர வேட்­கை­யினை முன்­னோக்­கித் தள்­ள­வேண்­ டும் என்­பதே அந்­தச் செய்­தி­யா­கும். உலக அர­சி­யல் நீதி­யின் அச்­ சில் சுழல்­வ­தில்லை.

மாறாக நலன்­க­ளின் அச்­சி­லேயே சுழல்­கி­ றது. ஈழத் தமிழ் மக்­க­ளுக்கு வாய்ப்­பான ஓர் அர­சி­யற்­சூ­ழல் வரும் ­போது ஒரு பொது­வாக்­கெ­டுப்­பினை நடத்­து­வ­தற்­கான வாய்ப்­பும் நமக்­குக் கிடைக்­கும்.

அது­வரை எமது சுதந்­தி­ர­வேட்­கை­யினை உல­குக்கு முர­ச­றைந்து கொண்­டி­ருப்­பது அவ­சி­ய­மா­ன­தா­கும்’’ என்று தனது நோக்­கத்­தை­யும் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது அறிக்கை.

ஒற்­றை­யாட்­சியை விட்­டுக்­கொ­டுக்க மாட்­டோம், பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை, அதி­கா­ரங்­களை வழங்­கி­விட்டு அதனை மறு பக்­கத்­தால் திரும்­பப் பெறு­வ­தற்­கான வச­தி­, வடக்கு கிழக்கை இணைக்க மறுப்­பது என்று கொழும்பு அரசு, தீர்வு முயற்­சி­யில் நேர்­மை­யற்று இருக்­கும் நிலை­யில் இத்­த­கைய முன்­னெ­டுப்­புக்­ கள் தவிர்க்க முடி­யா­தவை என்­ப­து­தான் யதார்த்­தம்.