பண்­டத்­த­ரிப்பு பொதுச் சந்தை சுற்­றா­ட­லில் மரக்­கறி விற்­கத்தடை

யாழ்ப்­பா­ணம் பண்­டத்­த­ரிப்­புப் பொதுச் சந்­தை­யில் இருந்து 500 மீற்­றர் தூரம் வரை உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளில் மரக்­கறி வகை­கள் விற்­பனை செய்­வது வலி.தென் மேற்­குப் பிர­தேச சபை­யால் தடை செய்­யப்பட்டுள்­ளது.

குறித்த பிர­தேச சபை­யின் கீழுள்ள பண்­டத்­த­ரிப்பு உப அலு­வ­ல­கப் பணி­யா­ளர்­கள் இதற்­கான நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

பண்­ட­த­ரிப்பு பொதுச் சந்­தை­யைச் சூழ­வுள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளில் மரக்­கறி வகை­கள் விற்­கப்­ப­டு­வ­தால் சந்தை வியா­பா­ரம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நாளாந்­தம் வாடகை செலுத்தி சந்­தைக்­குள் வியா­பா­ரத்­தில் ஈடு­ப­டும் வியா­பா­ரி­கள் இத­னால் பாதிப்­ப­டை­கின்­ற­னர் என்று வலி.தென் மேற்கு பிர­தேச சபை­யின் பண்­டத்­த­ரிப்பு உப அலு­வ­ல­கத்­துக்­குச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இதனை அடுத்து உப அலு­வ­ல­கத்­தின் அதி­கா­ரி­கள் பிர­தேச சபை­யின் சட்­டத்­திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கப் பொதுச் சந்­தை­யில் இருந்து 500 மீற்றர் சுற்று வட்­டத்­தில் உள்ள வர்த்­தக நிலைய உரி­மை­யா­ளர்­க­ளு­டன் சுமுக­மா­கக் கலந்­து­ரை­யாடி மரக்­கறி வகை­க­ளின் விற்­ப­னை­யைக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வந்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த நட­வ­டிக்­கை­யால் சந்தை வியா­பா­ரி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர் என­வும் முன்­னர் மதி­யம் ஒரு மணி­ வரை இயங்­கிய மரக்­க­றிச் சந்தை தற்­பொ­ழுது இரவு 7 மணி­வரை இயங்­கு­கின்­றது. வேலைக்­குச் சென்று வீடு திரும்­பு­வோர் இந்­தச் சந்­தை­யால் மிக­வும் பய­ன­டை­கின்­ற­னர் என­ வும் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like