போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைக்க முயற்சி

போர்க்­குற்­றங்­கள் தொடர்­பாக வன்­னிக் கள­மு­னை­யில் நிலை­கொண்­டி­ருந்த இரா­ணுவ அதி­கா­ரி­கள் மற்­றும் படை­யி­ன­ரைப் பொறுப்­புக்­கூற வைக்க முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக இரா­ணு­வத் தலைமை அதி­காரி மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­கர தெரி­வித்­துள்­ளார்.

பொறுப்­புக்­கூ­றல் விவ­கா­ரங்­க­ளுக்­குத் தீர்­வு­காண இரா­ணு­வம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக ஊட­கத்­துக்கு விளக்­க­ம­ளித்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வன்­னிப் போர் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்­தார்­கள் என்ற அடிப்­ப­டை­யில், சண்­டை­யி­டும் படைப்­பி­ரி­வு­கள் தண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

படைப்­பி­ரி­வு­க­ளுக்­குத் தலைமை தாங்­கிய இரா­ணு­வத் தள­பதி சரத் பொன்­சே­கா­வுக்­குத் திரும்­பத் திரும்ப அமெ­ரிக்க நுழை­வி­சைவு மறுக்­கப்­பட்­டுள்­ளது.

59ஆவது டிவி­ச­னுக்­குத் தலைமை தாங்­கிய மேஜர் ஜென­ரல் சாஜி கல்­ல­கேக்கு ஆஸ்­தி­ரே­லியா நுழை ­விசைவு வழங்க மறுத்­துள்­ளது – என்­றார்.

You might also like