கோட்டை, மருதானை தொடருந்து நிலையங்களில் அமளி!

தொடருந்துச் சாரதிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப் புறக்கணிப்புத் தொடரும் என்று தொடருந்துச் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடருந்துச் சாரதி உதவியாளர்களை இணைத்துக் கொள்ளும் ஒழுங்கு விதிகள் திருத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலை முதல் தொடருந்துச் சாரதிகள் பணிப் புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

தொடருந்துச் சாரதிகள் பணிப் புறக்கணிப்பால் கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்துத் தொடருந்துச் சேவைகளும் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதனால் பயணிகள் மத்தியில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் பயணிகள் பெரும் எண்ணிக்கையில் குழுமியுள்ளனர். அவர்கள் அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.

மருதானை தொடருந்து நிலையத்திலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது. அங்கு சிறப்பு பொலிஸ் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

You might also like