வடக்கில் காணி­களை விடு­விக்க கால அவ­கா­சம் தேவை

வடக்­கில் படை­யி­னர் வச­முள்ள பொது­மக்­க­ளின் காணி­க­ளில் விடு­விக்­கக்­கூ­டி­ய­ வற்றை விடு­விப்­ப­தற்கு இன்­னும் இரண்டு வருட கால அவ­கா­சம் தேவை என்று அர­சும் இரா­ணு­வ­மும் நேற்று அறி­வித்­தன.

தேசிய பாது­காப்­பை­யும் கருத்­தி­லெ­டுத்து இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டும் என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விடு­விக்­கப்­ப­டாத காணி­க­ளுக்கு மாற்­றுக் காணி­கள் பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என­வும் அரசு அறி­வித்­தது.
அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்று நடை­பெற்­றது.

வடக்­கில் பொது­மக்­க­ளின் காணி விடு­விப்புத் தொடர்­பில் அங்கு கேள்வி எழுப்­பப்­பட்­டது.
இரா­ணு­வப் பேச்­சா­ளர் மேஜர் ஜென­ரல் ரொஷான் சென­வி­ரத்ன பதி­ல­ளித்­தார்.

‘‘வடக்­கில் இரா­ணு­வம் வச­முள்ள பொது­மக்­க­ளின் காணி­களை விடு­விக்­கப் புதி­ய­தொரு வழி­முறை உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. இன்­னும் இரண்டு வரு­டங்­க­ளுக்­குள் காணி­கள் விடு­விக்­கப்­ப­டும். அவ்­வப்­போது காணப்­ப­டும் பாது­காப்பு நில­மை­க­ளைக் கருத்­திற்­கொண்டு நிலங்­கள் விடு­விக்­கப்­ப­டும். அல்­லது பொது­மக்­க­ளுக்கு மாற்­றுக் காணி­கள் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்’’ என்­றார்.

‘‘இரா­ணு­வம் வச­முள்ள பொது­மக்­க­ளின் காணி­க­ளில் 62 சத­வீ­தம் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. ஏனைய காணி­க­ளை­யும் விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். அல்­லது மாற்­றுக் காணி­க­ளா­வது வழங்­கப்­ப­டும்’’ என்று அமைச்­ச­ர­வை­யின் இணைப் பேச்­சா­ள­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார்.

வடக்­கில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 5
ஆயி­ரத்து 299.39 ஏக்­கர் காணி­க­ளும் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 9 ஆயி­ரத்து 148.47 ஏக்­கர் காணி­க­ளும் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் ஆயிரத்து 984 ஏக்­கர் காணி­க­ளும் வவு­னியா மாவட்டத்தில் 27 ஆயிரத்து 230 ஏக்கர் காணிகளும் மன்­னார் மாவட்டத்தில் 3ஆயிரத்து 294 ஏக்கர் காணிகளும் இரா­ணு­வத்­தி­னர் வசம் உள்­ளன என்று அரச புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஆனால், முல்­லைத்­தீ­வில் மட்­டும் சுமார் 25 ஆயி­ரம் ஏக்­கர் காணி அரச படை­க­ளின் வசம் உள்­ளன என்று அடை­யா­ளம் கொள்கை ஆய்­வுக்­கான நிலை­யம் அண்­மை­யில் தனது ஆய்­வ­றிக்கை ஒன்­றில் தெரி­வித்­தி­ருந்­தது.

You might also like