பெண் துர்நடத்தை : பொலிஸ் அதிகாரி கைது

பெண் ஒருவரைப் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ரத்தோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

உடுத்தும்புரப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலத்தில் அவர் இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் சிறப்பு விசாரணைப்பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like