Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

முழு ஆத­ரவு அளிப்­போம்

அர­சி­யல் கைதி­க­ளின் பிரச்­சினை மீண்­டும் விஸ்­வ­ரூ­பம் எடுத்­துள்­ளது. அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் மூன்று கைதி­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டு­வ­ரு­வதை அடுத்து அவர்­க­ளின் நிலை மோச­மா­கி­யுள்ள நிலை­யில் இந்­தப் பிரச்­சினை மீண்­டும் மக்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

வடக்கு முழு­வ­தும் நாளைய தினம் முழு­ மை­யான கடை­ய­டைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட் டுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறிசேன, நாளை மறு­தி­னம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தர­வுள்ள நிலை­யில், அர­சி­யல் கைதி­கள் தொடர்­பில் தமிழ்ச் சமூ­கத்­தின் உறு­தி­யான செய்­தி­யைச் சொல்­லும் வகை­யில் இந்­தக் கடை­ய­டைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது .

இந்­தக் கைதி­கள் மூவர் தொடர்­பி­லும் அரச தலை­வர் ஏற்­க­னவே வழங்­கிய வாக்­கு­று­தி­களை அவர் நிறை­வேற்­ற­வில்லை என்­கி­ற­போது இந்­தப் போராட்­டம் முக்­கி­ய­மா­ன­து­தான்.

இந்த வாக்­கு­றுதி என்று மட்­டு­மல்ல இது­போன்ற பல வாக்­கு­று­தி­ களை அரச தலை­வர் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கி­விட்டு மறந்­து­போய்­விட்­டார். அதில் புகழ்­பெற்­றது, வலி. வடக்கு மக்­களை 6 மாதங்­க­ளில் சொந்த இடங்­க­ளில் குடி­ய­மர்த்­துவேன் என்று அவர் வழங்­கிய வாக்­கு­றுதி. அவர்­க­ளில் ஒரு பகு­தி­யி­னர் இன்­ன­மும்­கூட சொந்த இடங்­க­ளுக்­குத் திரும்­பா­ம­லேயே இருக்­கின்­ற­னர்.

இந்த மூன்று அர­சி­யல் கைதி­க­ளி­ன­தும் தற்­போ­தைய கோரிக்கை பார­தூ­ர­மா­ன­தன்று. தமது வழக்­கு­க­ளைத் தமக்­குத் தெரிந்த மொழி­யில் நடத்­து­வ­தற்கு வச­தி­யாக அவை ஏற்­க­னவே விசா­ரிக்­கப்­பட்டு வந்த வவு­னியா நீதி­மன்­றத்தி­ லேயே தொடர்ந்­தும் விசா­ரிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று கேட்­கி­றார்­கள்.

அந்த வழக்­கின் சாட்­சி­க­ளுக்கு அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டது என்ற கார­ணத்­தைக்­கூ­றியே இந்த வழக்கை சட்ட மா அதி­பர் திணைக்­க­ளம் வவு­னி­யா­வில் இருந்து அனு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றி­யுள்­ளது.

விடு­த­லைப் புலி­கள் இயக்க முன்­னாள் போரா­ளி­களே சாட்­சி­கள் என்­ப­த­னால் அவர்­கள் தமிழ்ப் பகுதி நீதி­மன்­றங்­க­ளுக்கு வந்து சாட்சி சொல்­வ­தற்கு அச்­சப்­ப­டு­கி­றார்­கள் என்று பொலிஸ் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போர்க் காலங்­க­ளில் விடு­த­லைப் புலி­க­ளால் பிடிக்­கப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அரச படை­யி­னரை போரின் இறுதி நாள்­க­ளில் கொன்று எரித்­தார்­கள் என்­பதே இவர்­கள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு. அதனை அவர்­கள் செய்­தார்­கள் என்­ப­தற்­கான சாட்­சி­க­ளாக முன்­னாள் புலி­கள் இரு­வரே பொலி­ஸா­ரால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். அவர்­க­ளி­லும் ஒரு­வர் வெளி­நாடு சென்­று­விட்­டார்.

எஞ்­சி­யுள்ள ஒரு­வ­ருக்கே அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது என்று பொலி­ஸார் இப்­போது கூறு­கின்­ற­னர். சர­ண­டைந்த விடு­த­லைப் புலி­கள் இயக்­கப் போரா­ளி­க­ளைக் கொன்­றார்­கள் என்று அரச படை­யி­னர் மீது சுமத்­தப்­ப­டும் போர்க்­குற்­றத்­திற்கு நிக­ரான ஒரு குற்­றச்­சாட்டே, இந்­தக் கைதி­கள் மீதும் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அரச படை­யி­னர் மீதான அத்­த­கைய குற்­றச்­சாட்டை விசா­ரிப்­ப­தற்­கான நீதிப் பொறி­மு­றை­யைக்­கூட உரு­வாக்­கு­வ­தற்கு முன்­வ­ராத இந்த அரசு, அதி­கா­ரம் தன் வசம் இருப்­ப­தைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு புலி­கள் தரப்­பில் இழைக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் அதே­போன்ற குற்­றத்தை விசா­ரணை செய்ய முற்­பட்­டி­ருப்­ப­தும், அத­னை­யும் தமக்­குச் சாத­க­மான வகை­யில் விசா­ரணை செய்ய முற்­பட்­டி­ருப்­ப­தும் ஏற்­பு­டை­ய­தன்று.

இந்த வழக்­கில் சாட்­சி­க­ளாக இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள், தடுப்­பில் இருந்து அவர்­களை விடு­விப்­ப­தற்­கான நிபந்­தனை­யாகவே அரச சாட்­சி­க­ளாக மாற இணங்­கி­னார்­கள் என்­றும் சொல்­லப்­ப­டு­கி­றது. இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு தக­வல் இல்­லை­யா­யி­னும், இலங்­கை­யின் பொலிஸ் மற்­றும் விசா­ர­ணைப் பொறி­மு­றை­யில் அப்­ப­டி­யொன்று நடக்­கவே முடி­யாது என்று நிரா­க­ரித்­து­வி­ட­வும் முடி­யாது.

எப்­ப­டிப் பார்த்­தா­லும், இலங்­கை­யின் அரச நீதி சிங்­க­ளத் தரப்­பின் பக்­க­மா­கவே சாய்ந்து நிற்­கின்­ற­மையை இந்த வழக்கு உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. அப்­ப­டிப்­பட்ட சிங்­கள நீதி­யையே தமிழ்ச் சமூ­கம் எதிர்க்­கின்­றது.

அதே­நே­ரம், 1-0 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட முன்­னாள் புலி­களை மறு­வாழ்வு வழங்கி விடு­வித்­த­தா­கக் கூறிக்­கொள்­ளும் இந்த அரசு, போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் உள்­ளிட்ட சில நூறு பேரை மட்­டும் தொடர்ந்­தும் தடுத்து வைத்­தி­ருப்­ப­தும் நீதி­யான செயல் அல்ல.

எனவே, பட்­டி­னிப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள கைதி­க­ளின் வழக்­கு­களை உடன் வவு­னி­யா­வுக்கு மாற்ற வலி­யு­றுத்­தி­யும், தமிழ் அர­சி­யல் கைதி­கள் அனை­வ­ரை­யும் விடு­விக்க வலி­யு­றுத்­தி­யும் நாளை அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள அடைப்­புக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தும் ஆளு­நர் அலு­வ­ல­கம் முன்­பாக நடக்க இருக்­கும் ஆர்ப்­பாட்­டத்­தில் பங்­கேற்­ப­தும் தமி­ழர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ர­தும் தலை­யாய கடமை.

நாம் போராட மறுத்­தால் இன்று அவர்­க­ளுக்கு நடப்­பது நாளை எமக்­கும் நடக்­கும் என்­பதை நினை­வில் வைத்­தி­ருப்­போம்.

கடை­ய­டைப்­புக்­கள் எமது பொரு­ளா­தா­ரத்­தையே பாதிப்­பவை என்­ப­தால், ஆர்ப்­பாட்­டம் நடக்­கக்­கூ­டிய அரை நாளுக்கு மட்­டும் கடை­களை மூடி மாலை­யில் அவற்­றைத் திறப்­ப­தற்கு அனு­ம­திப்­பது குறித்­துப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­த­வர்­க­ளும் சிந்திப்பது சிறந்­தது.