அர­சி­யல் என்­பது ஒரு சாக்­க­டையே

அர­சி­ய­லில் நிரந்­தர நண்­பர்­க­ளும் இல்லை; நிரந்­தர எதி­ரி­க­ளும் இல்லை என்­பது யதார்த்­த­மான தொரு முது­மொ­ழியே. இதனை முற்­று­மு­ழு­ தாக நிரூ­பிப்­பது போன்று இலங்கையின் இன்­றைய அர­சி­யல் நில­வ­ரங்­கள் அமைந்து வரு­கின்­றன.

கொழும்பு அர­சி­ய­லில் கீரி­யும் பாம்­பும் நிலை­யில் தொடர்ந்து பல தசாப்­தங்­க­ளாக அர­சி­யல் செய்து வந்த ஐ.தே.கட்­சி­யும் சிறி­லங்கா சுதந் தி­ரக் கட்­சி­யும், கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­த­வின் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக சுதந்­தி­ரக்­கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ரையே பொது வேட்­பா­ள­ராக்கி மகிந்­த­வைப் பதவி கவிழ்த்த வர­லாற்­றுத் திருப்­பு­முனை மூலம் மேற் சொன்ன ‘அர­சி­ய­லில் நிரந்­தர நண்­பர்­க­ளும் இல்லை, எதி­ரி­க­ளும் இல்லை’ என்­பதை நிரூ­பித்­தி­ருந்­தன.

அந்த வகை­யில் அண்­மைக்­கால அர­சி­யல் மாற்­றங்­களை அவ­தா­னிக்­கும்போது, சில சம­யம் வாய் விட்­டுச் சிரிக்க வேண்­டும் போலி­ருக்­கி­றது.

2009 மே மாதம் இறுதிப் போரில் விடு­த­லைப் புலி­கள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அந்த வேளை­யில் வௌிநாட்­டி­லி­ருந்த அப்போதைய அரச தலை­வர் மகிந்த நாடு திரும்­பி­ய­வேளை வானூர்தி நிலை­யத்­தில் அவரை வர­வேற்­கச் சென்­றி­ருந்த அப்போதைய சுதந்­தி­ரக் கட்­சி­யின் செய­லா­ளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முகத்­தில் பூரிப்­போடு மகிந்­த­வைக் கட்­டித் தழுவி வர­வேற்ற காட்சியை மனப் பொரு­ம­லு­டன் கண்­ணுற்­றோம்.

தவற விடாதீர்கள்:  யாழ்.குடா­நாடு தலை­நி­மிர்ந்து நிற்­குமா?

எவ­ரா­லும் தோற்­க­டிக்க இய­லா­தெ­னப் பெரு­மை­யா­கப் பேசப்­பட்ட மகிந்த அரச தலை­வர் தேர்­த­லில் தோல்­வி­யுற்று, அலரி மாளி­கை­யி­லி­ருந்து வௌியேற தமது சொந்த ஊருக்­குச் செல்ல அஞ்சி, ரணில் விக்­கி­ரம சிங்­க­வைத் தொடர்பு கொண்டு பாது­காப்­புப் படை­யி­ன­ரது உதவி பெற்று அலரி மாளி­கை­யி­னின்­றும் வௌியே­றிச் சென்ற காட்­சி­யை­யும் கண்டு மன ஆறு­த­லுற்­றோம்.

தேர்­த­லில் தோல்­வி­யுற்­றால் மகிந்­த­வால் பழி­வாங்­கப்­ப­டு­வேன் என்ற அச்­சத்­தில் தேர்­தல் தினத்­தன்று மறை­வி­ட­மொன்­றில் தாம் ஔிந்தி­ருந்­த­தை மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­த­தைக் கேட்டு நாமும் அனு­தா­பப்­பட்­டோம்.

இன்று மகிந்த அணி­யி­ன­ரு­ட­னான சம­ரச முயற்­சி­க­ளில் ஈடு­ப­டும் தரப்­பி­ன­ரி­டம் ‘எந்­தக் கார­ணம் கொண்­டும் ராஜ­பக்ச குடும்­பத்­தைச் சேர்ந்த எவ­ரை­யும் தலைமை அமைச்­ச­ராக ஆக்­கும் யோச­னைக்கு ஒரு போதுமே நான் ஒப்­புக்­கொள்ள மாட்­டேன் எனக் கர்ச்சிக்கும் அரச தலை­வ­ர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆச்­ச­ரி­யத்­தோடு பார்க்­கி­றோம்.

அந்த வகை­யில் அர­சி­யல் என்­பது ஒரு சாக்­கடை என்று எவரோ ஒரு அனு­ப­வ­சாலி சொல்லி வைத்த கருத்து, சொல்­லி­வைத்­தாற்­போன்று இன்­றைய எமது இலங்கை அர­சி­ய­லுக்கு முற்­று­மு­ழு­தா­கப் பொருந்­து­கி­றது எனக் கொள்ள முடி­கி­ற­தல்­லவா?

தவற விடாதீர்கள்:  யாழ்.குடா­நாடு தலை­நி­மிர்ந்து நிற்­குமா?

ப.வாகீசன், ஊரெழு.

You might also like