இளம்பறவைகள் கழகத்தின் கால்பந்தாட்ட முடிவுகள்

சிலாவத்தை இளம் பற­வை­கள் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள், குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­கள் சில­வற்­றின் முடி­வு­கள்.

வவு­னியா ஈஸ்­வ­ரன் விளை­யாட் டுக் கழக அணிக்­கும் வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் ஈஸ் வ­ரன் விளை­யாட்­டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி ­பெற்­றது.

விண்­ணொளி விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் வவு­னியா யுனி­பைட் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் வவு­னியா யுனி­பைட் விளை­யாட்­டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

ஒற்­றுமை விளை­யாட்­டுக் கழக அணிக்­கும், விக்­னேஸ்­வரா விளை­ யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­ யி­லான ஆட்­டத்­தில் ஒற்­றுமை விளை­யாட்­டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

சந்­தி­ரன் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும், ஆனந்தா விளையாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் சந்­தி­ரன் விளை­யாட்­டுக் கழக அணி 2:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

வவு­னியா ஈஸ்­வ­ரன் விளை­யாட் டுக் கழக அணிக்­கும் சுப்­பர்­ராங் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் சுப்­பர் ராங் விளை­யாட்­டுக் கழக அணி 3:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

செம்­மலை உத­ய­சூ­ரி­யன் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும், வவு­னியா யுனி­பைட் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் உத­ய­சூ­ரி­யன் விளை­யாட்­டுக் கழக அணி 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

You might also like