தமிழகத்திலிருந்து 55 பேர் நாடு திரும்பினர்

கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குச் சென்ற 55 பேர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கான இலவச வானூர்திச் சிட்டைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் தூதுவராலயம் வழங்கியுள்ளது.

அதேவேளை நாடு திரும்பியுள்ள 12 குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

You might also like