நாமல் கைதானதை அறிந்த மகிந்த பதற்றம்

நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யபட்டதை அறிந்து கொண்ட மகிந்த ராஜபக்ச, ஜப்பானிலிருந்து நாளை அவசரமாக நாடு திரும்பவுள்ளார் என்று தெரியவருகிறது.

தனிப்பட்ட விடயமாக மகிந்த ஜப்பான் சென்றுள்ள நிலையில், நீதிமன்றத் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் நாமல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் லைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அறிந்து கொண்ட மகிந்த நாடு திரும்பவுள்ளார் என்று அவரது பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்கு பண்டார தெரிவித்துள்ளார்.

 

You might also like