பப்ரிஷ் அணி சம்பியனானது

கிளிநொச்சி மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­திய துடுப்­பாட்­டத் தொட­ரில், கிளி­நொச்சி பப்­ரிஷ் அணி சம்­பி­ய­னா­னது.

கிளி­நொச்சி சாந்­த­பு­ரம் மைதா­னத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் இந்து இளை­ஞர் விளை­யாட்டுக் கழக அணியை எதிர்த்து பப்­ரிஷ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய பப்­ரிஷ் அணி 20 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 9 இலக்­கு­களை இழந்து 158 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­கபட்­ச­மாக மூர்த்தி 67 ஓட்­டங்­க­ளை­யும், கயன் 32 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்து வீச்­சில் பார்த்­தீ­பன் 4 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்து இளை­ஞர் அணி 20 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 6 இலக்­கு­களை இழந்து 144 ஓட்­டங்­களை மட் டும் பெற்று 14 ஓட்­டங்­க­ளால் தோல்­வி­ய­டைந்­தது.

ஆட்­ட­நா­ய­க­னாக மூர்த்­தி­யும், தொட­ராட்ட நாய­க­னாக அனுக்­ச­னும் தெரி­வா­கி­னர்.

தவற விடாதீர்கள்:  பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக சகிப் அல் ஹசன்

You might also like