மெஸ்ஸி அதிரடி

உலகக்கிண்ணத்துக்கு ஆர்ஜென்ரீனா தகுதி

ரஷ்யாவில் அடுத்த வரு­டம் நடை­பெ­ற­வுள்ள கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணத் தொட­ருக்கு ஆர்­ஜென்­ரீனா அணியை அழைத்­துச் சென்­றுள்­ளார் லய­னல் மெஸ்ஸி.

இதன் மூலம் அவர் ஆர்­ஜென்­ரீனா உல­கக் கிண்­ணத் தொட­ருக்கு தகுதி பெறுமா பெறாதா என்ற நீண்ட கேள்­வி­கள், சந்­தே­கங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளார்.

ரஷ்­யா­வில் அடுத்த வரு­டம் கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தத் தொட­ருக்­கான தகு­திச் சுற்று ஆட்­டங்­கள் உல­கின் பல பாகங்­க­ளி­லும் நடை­பெற்று வரு­கின்­றன. தென்­ன­ம­ரிக்­கக் கண்­டத்­தில் உள்ள நாடு­க­ளில் முதல் நான்கு இடங்­க­ளில் உள்ள நாடு­கள் மட்­டுமே உல­கக்­கிண்­ணத் தொட­ருக்கு நேர­டி­யா­கத் தகுதி பெறும்.

ஐந்­தா­வது இடத்­தைப் பிடிக்­கும் அணி, நியூ­ சி­லாந்­து­டன் மோதி அதில் வெற்­றி­பெற்­றால் உல­கக்­கிண் ணத் தொட­ருக்கு நேர­டி­யா­கத் தகுதி பெறும்.

ஆர்­ஜென்­ரீனா அணி கடை­சி­யாக பெரு அணிக்கு எதி­ராக விளை­யா­டிய ஆட்­டத்தைச் சம­நி­லை­யில் முடித்­துக் கொண்­டது.

இந்­தச் சம­நிலை ஆர்­ஜென்­ரீ­னா­வுக்கு மேலும் பின்­ன­டை­வைக் கொடுத்­தது. இத­னால் ஈக்­கு­வ­டோர், ஆர்­ஜென்­ரீனா அணி­க­ளுக்கு இடை ­யி­லான தகு­தி­யாட்­டம் நேற்று நடை­பெற்­றது.

தவற விடாதீர்கள்:  வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி

இந்த ஆட்­டத்­தில் ஆர்­ஜென்­ரீனா வெற்­றி­பெற்­றால் அந்த அணி உல­கக்­கிண்­ணத் தொட­ருக்­குத் தகுதி பெறும் தோற்­றால் வெளி­யே­றும் நிலை இருந்­தது.

ஈக்­கு­வ­டோரை 3:1 என்ற கோல் கணக்­கில் வீழ்த்தி உல­கக்­கிண்­ணத் தொட­ருக்கு ஆர்­ஜென்­ரீ­னாவை அழைத்­துச் சென்­றார் மெஸ்ஸி. மூன்று கோல்­க­ளை­யும் அவரே பதி­வு­செய்­தார்.

ஆர்­ஜென்­ரீ­னா­வுடன் இணைந்து தென்­ன­ம­ரிக்­கக் கண்­டத்­தில் உள்ள உரு­குவே, கொலம்­பியா ஆகிய அணி­க­ளும் தகுதி பெற் றன.

5 முறை கிண்­ணம் வென்ற பிரே­சில் ஏற்­க­னவே தகுதி பெற்­ற­ருந்­தது. 32 நாடு­க­ளைக் கொண்ட முக்­கிய சுற்­றுக்கு 23 நாடு­கள் தகுதி பெற்­றுள்ளன. இன்­னும் 9 நாடு­கள் தகுதி பெற­வேண்­டும்.

You might also like