மோசமான துடுப்பாட்டம் தோல்விக்கு காரணம்

கோக்லி அதிருப்தி

‘‘ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான ரி–-20 தொட­ரில் நேற்­று ­முன்­தி­னம் இடம்­பெற்ற இரண்­டா­வது ஆட்­டத்­தில் இந்­திய அணி தோல்­வி­ய­டைந்­த­மைக்கு முக்­கிய கார­ணம், நேர்த்­தி­யற்ற துடுப்­பாட்­டமே’’ என்று தெரி­வித்­தார் இந்­திய அணி­யின் தலை­வர் கோக்லி.

ஆட்­டம் முடி­வ­டைந்த பின்­னர் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே கோக்லி இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘துடுப்­பாட்­டத்­தில் நாங்­கள் போது­மான அள­வுக்கு சிறப்­பா­கச் செயற்ப­ட­வில்லை. மோச­மான துடுப்­பாட்­டத் தால்­தான் தோற்­றோம். இந்த ஆடு­க­ளத்­தில் துடுப் பெ­டுத்­தா­டு­வது ஆரம்­பத்­தில் சவா­லாக இருந்­தது.

 

அதே நேரத்­தில் ஆஸ்­தி­ரே­லிய வேகப்­பந்து வீரர் பெரென்­டோர்ப் மிக­வும் அபா­ர­மாக பந்­து­வீசி எங்­க­ளுக்கு நெருக்­க­டி­யைக் கொடுத்­து­விட்­டார்.
அவர் நேர்த்­தி­யாக பந்­து­வீ­சி­னார். எங்­க­ளது சரி­வுக்கு அவ­ரது சிறப்­பான பந்­து­வீச்­சுத்­தான் கார­ணம்’’ என்று கோக்லி மேலும் தெரி­வித்­தார்.

இந்­திய அணி துடுப்­பெ­டுத்­தா­டி­ய­போது முதல் பந்­துப்­ப­ரி­மாற்­றத்­தி­லேயே இரண்டு இலக்­கு­க­ளைப் பறி­கொ­டுத்­தது.

ரோகித் சர்மா 8 ஓட்­டங்­க­ளு­ட­னும், கோக்லி ஓட்­ட­மெ­தை­யும் பெறா­தும் ஆட்­ட­மி­ழந்­தி­ருந்­த­னர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவற விடாதீர்கள்:  இரண்­டா­வது ஆட்­டம் இன்று

You might also like