ஆஸி. வீரர்கள் சென்ற பேருந்து மீது கல்வீச்சு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது மர்ம நபர்­கள் கற்­களை வீசித் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர்.

இந்­தியா – ஆஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்று ஆட்­டங்­க­ளைக் கொண்ட ரி-–20 தொடர் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது.

முத­லா­வது ஆட்­டத்­தில் இந்­தியா வெற்­றி­பெற்­றது. நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இரண்­டா­வது ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லிய அணி வெற்­றி­பெற்று பதி­லடி கொடுத்­தது.

இந்த ஆட்­டளளம் முடி­வ­டைந்த பின்­னர் ஆஸ்­தி­ரே­லிய வீரர்­கள் த­மது விடு­தி­க­ளுக்­குப் புறப்­பட்­டுச் சென்­ற­போது, அவர்­கள் பய­ணித்த பேருந்து மீது கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

இந் தி­யா­வின் தோல்­வியை அடுத்து விரக்­தி­யில் இருந்த இந்­திய ரசி­கர்­கள் இந்­தத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­க­லாம் என்று சந்­தே­கம் தெரி­விக்­கப்­பட்டது.

இந்­தக் கல்­வீச்­சுத் தாக்­கு­த­லுக்கு ஆஸ்­தி­ரே­லிய வீரர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தவற விடாதீர்கள்:  இரண்­டா­வது ஆட்­டம் இன்று

You might also like