வியட்நாமில் வெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 பேர் ஆக உயர்வு

வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகின்றது.
இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 15 பலியாகியுள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
18,000-க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழையில் சிக்கி 8,000 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் 40,000க்கும் மேற்பட்ட விலங்குகள் மழையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவற விடாதீர்கள்:  டோக்­லா­மில் மீண்­டும் பதற்­றம்!

You might also like