விபத்தில் படுகாயமடைந்த பிரதேசபை முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரீ. ஜப்பார்அலி (வயது57) சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை 12 மணியளவில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்குஅருகில் சிற்றூர்ந்து மற்றும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் நேற்று இந்த விபத்து ஏற்பட்டது.

இவ் விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில்,இருவர் முன்னதாக மூதூர் தள வைத்தியசாலையிலும் சிற்றூர்தியில் பயணித்ததில் படுகாயமடைந்த இருவரையும் கிண்ணியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் அதில் படுகாயமடைந்த ஜப்பார் அலி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி ; உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிண்ணியாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

You might also like