முகநூலில் அவதூறுப் பதிவுகள் : ஆசிரியர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

தமது பாடசாலை தொடர்பாக முகநூலில் அவதூறான தகவல்கள் பதியப்பட்டமைக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் இன்று காலை வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பாடசாலை முன்பாக ஒன்றுகூடிய ஆசிரியர்கள், தமது கோரிக்கைக்குப் பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

தவற விடாதீர்கள்:  மது­போ­தை­யில் சென்ற 4 இளை­ஞர்­கள் பொலி­சா­ரால் கைது!

You might also like