திட்டங்கள் கச்சிதமாக அமைந்தன

வோர்ணர் பெருமிதம்

‘‘ஏற்கனவே வகுத்த திட்­டங்­கள் கச்­சி­த­மாக அமைந்­த­மை­யால், இந்­திய அணியை இல­கு­ வில் தோற்­க­டிக்க முடிந்­தது’’ என்று தெரி­வித்­தார் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் பொறுப்­புத் தலை­வர் வோர்­ணர்.

ஆட்­டம் முடி­வ­டைந்த பின்­னர் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே வோர்ணர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘எங்­க­ளது திட்­டத்தைச் சிறப்­பாகச் செயற்ப­டுத் தி­னோம். அபா­ர­மான பந்து வீச்­சால் இந்த வெற்­றியை எளி­தில் பெற்­றோம். பெரென்­டோர்ப், அடம் சாம்­பா­வின் பந்­து­வீச்சு சிறப்­பாக இருந்­தது.

ஐ.பி.எல். தொட­ரில் விளை­யா­டிய அனு­ப­வம் இருந்­த­தால் ஹென் றிக்ஸை முன்­ன­தாக கள­மி­றக்­கி­னோம். அவ­ரும் அதைச் சிறப்­பா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டார்.

இறுதி ரி-–20 ஆட்­டம் ஹைத­ரா­பாத்­தில் நடப்­ப­தால் ரசி­கர்­க­ளின் ஆத­ரவு எங்­க­ளுக்கு இருக்­கும் (ஐ.பி.எல். தொட­ரில் ஹைத­ரா­பாத்­தின் தலை­வ­ராக வோர்­ணர் உள்­ளார்)’’ என வோர்­ணர் மேலும் தெரி­வித்­தார்.

You might also like