ரசிகர்கள் ஸ்ரோக்ஸைச் சீண்டுதல் அவசியம் ஆஷஸ் தொடர்பில் மிச்செல் ஸ்ராக் கருத்து

‘‘ஆஷஸ் தொடருக்காக, இங்கிலாந்து வீரர் ஸ்ரோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவ ரைச் சீண்டும் வகையில் கருத்துக் களைப் பகிருதல் அவ­சி­யம் என்று கருத்­துத் தெரி­வித்­துள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் ஸ்ராக் ஆஸ்­தி­ரே­லிய ஊட­க­மொன்­றுக்கு அண்­மை­யில் வழங்­கிய செவ்­வி­யி­லேயே மிச்­செல் ஸ்ராக் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘ஸ்ரோக்ஸ் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வரு­கை­தந்­தால் நன்­றாக இருக்­கும். அவ­ருக்கு எதி­ராக ஆஸ்­தி­ரே­லிய ரசி­கர்­கள் உரக்கக் கூச்­ச­லி­டு­ வதைப் பார்க்க விரும்­பு­கி­றேன்.

அவர் விளை­யா­டி­னால் நிச்­ச­யம் ரசி­கர்­க­ளின் கர­கோ­ஷம் அதி­க­மாக இருக்­கும். ஆனால் அதை அவர் சமா­ளிப்­பார் என்று நம்­பு­கி­றேன். அதே சம­யம் அவர் விளை­யா­டி­னா­ லும், விளை­யா­டா­விட்­டா­லும் இந்தத் தொடர் சிறப்­பா­ன­தாக இருக்­கும்’’ என ஸ்ராக் மேலும் தெரி­வித்­தார்.

அண்­மை­யில் இர­வு­நேர களி­யாட்ட விடு­திக்­குச் சென்ற ஸ்ரோக்ஸ் அங்கு நப­ரொ­ரு­வ­ரு­டன் கைக­லப்­பில் ஈடு­பட்­டார். இந்த விட­யம் காணொலி ஆதா­ரங்­க­ளு­டன் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் மறு அறி­விப்பு வரும்­வரை ஸ்ரோக்­ஸூக்கு தடை விதித்­துள்­ளது இங்­கி­லாந்து கிரிக்­கெட் சபை. எனி­னும் ஆஷஸ் தொட­ருக்­கான அணி­யில் ஸ்ரோக்­ஸின் பெயர் உள்­ளது.

தவற விடாதீர்கள்:  வில்லாரியலை தோற்கடித்தது பார்சிலோனா

இதை­ய­டுத்­துக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே ஸ்ராக் இவ்­வாறு தெரி­வித்­தார்.

You might also like