பதி­லைத் தந்­து­விட்டு யாழ்ப்­பா­ணம் வருக 

அரச தலை­வ­ரி­டம் வணி­கர் கழ­கம் வலி­யு­றுத்து

உணவு ஒறுப்பு போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல்­கை­தி­க­ளின் கோரிக்­கை­கள் நியா­ய­மா­ன­வை­ யா­கும். அவற்­றைப் புறந்­தள்ள முடி­யாது.

எதிர்­வ­ரும் 14ஆம்­தி­கதி சனிக்­கி­ழமை அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணத்­துக்கு வர இருக்­கி­றார். அவர் தனது வரு­கைக்கு முன்­னர் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பில் நல்ல ஒரு பதி­லைத் தர­வேண்­டும்.

பதி­லைத் தந்­து­விட்டே அர­ச­த­லை­வர் யாழ்ப்­பா­ணத்­துக்­கு  வர­வேண்­டும். இதுவே யாழ்ப்­பாண ஒட்­டு­மொத்த சமூ­கத்­தின் எதிர்­பார்ப்­பா­கும்.இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட வணி­கர் கழ­கம் தெரி­வித்­தது.

இது­தொ­டர்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

தமிழ் மக்­க­ளின் ஆத­ர­வு­டனே இந்த அரசு பத­விக்கு வந்­தது. ஆனால் தமிழ் மக்­க­ளின் எந்­த­வொரு பிரச்­சி­னை­யை ­யும் அரசு முற்­று­மு­ழு­தாகத் தீர்த்து வைக்­க­வில்லை. இது கவ­லை­த­ரும் விட­யமாகும்.

அர­சி­யல் கைதி­கள் விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் விட­யம், தனி­யார் காணி­களை இரா­ணு­வத்­தி­டம் இருந்து விடு­விக்­கும் செயற்­பாடு என எதி­லுமே திருப்­தி­ய­ளிக்­கும் நட­வ­டிக்­கைள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

வவு­னி­யா­வில் உள்ள நீதி­மன்­றங்­க­ ளில் சாட்­சி­களை முன்­னிலைப்­ப டுத்­து­வ­தில் பாது­காப்­புப் பிரச்­சி­னை­கள் இருப்­ப­தா­கக் கூறி தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்­கு­கள் அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டன. கைதி­கள் அநு­ரா­த­பு­ரம் சிறை­க­ளில் அடைத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் மட்­டு­மன்றி இவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரும் சொல்­லொணாத் துன்­பங்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். அரசு இது­வி­ட­யத்­தில் இனி­யும் இழுத்­த­டிப்­பு­களை மேற்­கொள்ள முடி­யாது. உட­ன­டி­யாக கைதி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும். இல்­லை­யேல் அவர்­கள் நிரந்­த­ர­மாக வதி­யும் மாவட்­டங்­க­ளில் உள்ள நீதி­மன்­ற­க­ளில் அவர்­க­ளைப் பாரப்­ப­டுத்த வேண்­டும்.

இந்­தக் கோரி­கை­க­ளுக்­காக நடத்­தப்­ப­டும் எமது மக்­க­ளின் நியா­ய­மான போராட்­டங்­கள் மற்­றும் கவ­ன­வீர்ப்­பு­கள் புறந்­தள்­ளி­விட முடி­யா­தவை – எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like