விசா­ரணை முடி­யும் வரை பொறுத்­தி­ருங்­கள்-ராஜித

ராஜித

லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வ­னத்­தின் முன்­னாள் தலை­வர் உண்­மை­யி­லேயே  குற்­றம் செய்­த­வரா என்­பதை விசா­ர­ணை­ யி­லேயே கண்­டு­பி­டிக்­க­வேண்­டும்.

அவர் குற்­ற­மற்­ற­வ­ரா­கக் கூட இருக்­க­லாம். எது­வாக இருந்­தா­லும் விசா­ர­ணை­யின் முடி­வி­ லேயே கூற­மு­டி­யும். இவ்­வாறு அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார்.

அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வ­னத்­தின் முன்­னாள் தலை­வர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச் சாட்­டில் அவர் உண்­மை­யி­லேயே  குற்­றம் செய்­த­வரா என்­பதை விசா­ர­ணை­யி­ லேயே கண்­டு­பி­டிக்­க­வேண்­டும்.

ஒரு­வேளை அவர் குற்­ற­மற்­ற ­வ­ரா­ கக்­கூட இருக்­க­லாம்.  அவ­ரு­டைய வங்­கிக் கணக்குக்­கு யாரா­வது பணத்தை மோசடி செய்து வைப்­புச் செய்­தி­ருக்­க­லாம். இவர் நண்­பர் என்ற அடிப்­ப­டை­யில் யாருக்­கா­வது உதவி செய்­தி­ருக்­க­லாம். அவ்­வாறு ஏதா­வது இடம்­பெற்­றி­ருக்­க­லாம் என்று நான் கரு­து­கி­றேன்.

உண்­மை­யில் என்ன நடந்­தது என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­யாது. எது­வாக இருந்­தா­லும் விசா­ர­ணை­யின் முடி­வி­லேயே கூற­மு­டி­யும் – –என்­றார்.

You might also like