கள்­ளுக்கு கட்­டுப்­பாடு

சட்­ட­வி­ரோத கள் உற்­பத்­தி­க­ளைத் தடுப்­ப­தற்­காக மது­வரி கட்­ட­ளைச் சட்­டத்­தைத் திருத்­தம் செய்­வ­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

உள்­நாட்­டுக் கள் உற்­பத்­தியை ஊக்­கு­விக்­கும் நோக்­கி­லேயே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச் ச­ர­வை­யின் இணைப்­பேச்­சா­ள­ரும் காணி அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்­தார்.

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கித்­துள் கள் தவிர்ந்த ஏனைய கள் வகை­களை இறக்­கு­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற தென்னை மற்­றும் பனை மரங்­க­ளி­லி­ருந்து கள் இறக்­கு­வ­தற்­கு­வ­தற்கு அனு­ம­திப் பத்­தி­ரத்­தைப் பெற­வேண்­டும் என்று விட­யத்தை உட்­ப­டுத்தி மது­வரி கட்­ட­ளைச் சட்­டத்­தைத் திருத்­து­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட் டுள்­ளது.

இதற்­கான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் நிதி அமைச்­ச­ரால் முன்­வைக்­கப்பட்­டது என்­றார்.

You might also like