தாய்­வான் வங்­கி­யில் பண மோசடியில் முக்­கிய புள்­ளி­க­ளுக்­கும் தொடர்பா?

‘திடுக்’ தக­வல்­களை வெளி­யி­டு­கி­றது குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு

தாய்­வான் வங்­கி­யில் இணை­ய­வழி மோச­டி­யூ­டா­கத் திரு­டப்­பட்ட பணத்­தில் ஒரு பங்கு மாத்­தி­ரமே லிட்றோ எரி­வாயு நிறு­வ­னத்­தின் முன்­னாள் தலை­வ­ரி­டம் உள்­ளது.

எஞ்­சிய பங்­குப் பணம் அர­சின் முக்­கிய புள்­ளி­கள் உள்­ளிட்ட பல­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் சந்­தே­கம் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இந்­தி­யர்­கள் இரு­வர் பங்­குப் பணத்­தைப் பெற்­றுக்­கொண்டு நாட்­டை­விட்­டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­தா­க­வும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

இது தொடர்­பில் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அமெ­ரிக்­கா­வின் நியூ­யோர்க் நக­ரி­லுள்ள சிட்டி வங்­கி­யின் தலை­மை­யக கணி­னிக் கட்­ட­மைப்­புக்­குள் முத­லில் ஊடு­ரு­வல் நடந்­துள்­ளது. அத­னூ­டாக தாய்­வா­னின் ஈஷ்டன் வங்­கி­யின் கணக்­கி­லி­ருந்து 69.5 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் திரு­டப்­பட்­டுள்­ளது.

இதில் ஒரு சிறு­ப­குதி, நியூ­யோர்க்­கில் உள்ள இலங்கை வங்­கிக் கிளை­யின் ஊடாக இலங்­கைக்கு பரி­மாற்­றப்­பட்­டுள்­ளது. எஞ்­சிய பணம் எந்த நாடு­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்­பில் பன்­னாட்­டுப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

கடந்த 6ஆம் திகதி ஜனக சமிந்த என்­ப­வர் இலங்கை வங்­கிக்­குச் சென்று தனது வங்­கிக் கணக்­குக்கு அமெ­ரிக்க டொலர்­க­ளில் பணம் கிடைக்­க­வேண்­டி­யி­ருப்­ப­தாக வங்­கி­யின் முகா­மை­யா­ளர் ஜகத் அனு­ர­சி­றி­யி­டம் கோரி­யுள்­ளார்.

அவ­ரது வங்­கிக் கணக்­கைப் பரி­சீ­லித்­த­போது 11 லட்­சத்து 39 ஆயி­ரத்து 60 அமெ­ரிக்க டொலர் வைப்­பி­லி­டப்­பட்­டி­ருந்­தது.

அந்­தப் பணத்­தில் 3 கோடி ரூபாவை உடனே எடுக்­க­வும் மேலும் 5 கோடி ரூபாவை என்.டி.பி. வங்­கி­யில் உள்ள கணக்­குக்கு மாற்­ற­வும் அவர் வங்கி முகா­மை­யா­ள­ரைக் கோரி­யுள்­ளார். அதற்­கு­ரிய விண்­ணப்­பத்தை மேற்­கொள்­ளு­மாறு முகா­மை­யா­ளர் அவ­ருக்கு கூறி­யுள்­ளார்.

இந்த நிலை­யில், நியூ­யோர்க்கில் உள்ள இலங்கை வங்­கிக் கிளை­யி­லி­ருந்து இங்கு மின்­னஞ்­சல் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

அதில், இணைய ஊடு­ரு­வல் மூலம் பணம் திரு­டப்­பட்­டுள்ள விட­யம் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இலங்கை வங்­கி­யின் கிளைக்கு பணம் பரி­மாற்­றப்­பட்­ட­மை­யும் அறி­விக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து உஷா ர­டைந்த இலங்கை வங்­கிக் கிளை­யின் முகா­மை­யா­ளர் பொலி­ஸா­ருக்கு தக­வ­லைத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார். முதல் நாள் வங்­கி­யில் வந்து பணத்­தைப் பெற்­றுச் சென்ற ஜனக சமிந்த வங்­கிக்கு மீண்­டும் வந்­த­போது பொலி­ஸார் அவ­ரைக் கைது செய்­த­னர்.

அவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தில், லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர், இந்­தி­யா­வைச் சேர்ந்த டுட்­டா­லியா என்­ப­வர் அமெ­ரிக்க டொலர்­களை வங்­கி­யில் வைப்­பி­லி­டு­வார். அவ­ருக்கு 50 சத­வீ­தத்­தை­யம், 30 சத­வீ­தத்தை தன்னை (ஜனக சமிந்த) எடுத்­துக் கொள்­ளு­மா­றும், 20 சத­வீ­தத்தை தனக்கு (லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர்) தரு­மா­றும் கூறி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.
கொழும்­பி­லுள்ள பிர­பல ஐந்து நட்­சத்­திர விடு­தி­யில் வைத்து, இரு இந்­தி­யர்­க­ளுக்கு லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர் பணம் வழங்­கி­யுள்­ளார். இந்­தி­யர்­கள் இரு­வ­ரும் அந்­தப் பணத்­து­டன் நாட்­டை­விட்டுத் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

இதே­வேளை லிட்றோ நிறு­வன முன்­னாள் தலை­வ­ருக்கு 300 லட்­சம் ரூபா பணம் கிடைத்­துள்ள நிலை­யில், 20 லட்­சமே தன்­னி­டம் இருப்­ப­தாக அவர் வாக்­கு­மூ­லம் வழங்­கி­யுள்­ளார்.

எஞ்­சிய பணம் அர­சின் பெரும் புள்­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பில் சந்­தே­கம் எழுந்­துள்­ள­தாக, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like