தேர்தலில் போட்டியிடுவதற்காக திருத்­தம் கொண்­டு­வ­ர­வில்லை-பைசர்

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­தல்­க­ளில் பெண்­க­ளுக்கு நாம் இட­ஒ­துக்­கீடு வழங்­கி­யது, அமைச்­சர்­க­ளி­ன­தும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ன­தும், பிர­தேச அர­சி­யல்­வா­தி­க­ளி­ன­தும் மனை­வி­ய­ரையோ அல்­லது அவர்­க­ளது மகள்­க­ளையோ தேர்­த­லில் கள­மி­றக்­கு­வ­தற்­காக அல்ல. இவ்­வாறு மாகா­ண­ச­பை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்­தார்.

புதிய தேர்­தல் முறை­மை­யில் பெண்­கள் பிர­தி­நி­தித்­து­ வத்துக்கு அதி­க­ள­வில் இட­ம­ளிப்­பது தொடர்­பாக வெளி­நாட்டு தூத­ரக பிர­தா­னி­கள், உள்­நாட்டு மற்­றும் பன்­னாட்டு அரச சார்­பற்ற அமைப் பு­க­ளின் பிர­தி­நி­தி­கள், தேர்­தல் கண்­கா­ணிப்­பா­ளர்­களை தெளி­வூட்­டும் நிகழ்வு உள்­ளூ­ராட்சி மற்­றும் மாகாண அமைச்­சின் கேட்­போர் கூடத்­தில் நேற்று நடை­பெற்­றது.

இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்­சர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கும் மாகாண சபை­க­ளுக்­கும் 25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்­கும் சட்­டத்தை நிறை­வேற்­றி ­யுள்­ளோம்.
இலங்­கை­யில் 22 மில்­லி­யன் மக்­கள் உள்­ள­னர்.

இந்­தத் தொகை­யில் அனை­வ­ருக்­கும் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வதே எமது நோக்­க­மா­கும்.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் பெண் பிர­தி­நி­தித்­து­வம் வழங்­கும் போது அர­சி­யல்­வா­தி­க­ளின் குடும்­பத்­தில் வேட்­பா­ளர்­கள் தெரிவு செய்­வ­தனை இல்­லா­மல் செய்ய வேண்­டும் என்­பதே எனது கோரிக்­கை­யா­கும்.

இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டும். பெண்­க­ளுக்கு அர­சி­யல் ரீதி­யாக ஆர்­வ­மூட்ட வேண்­டும்.

முத­லா­வது பெண் தலைமை அமைச்­ச­ராக சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவை தெரிவு செய்­த­மை­யின் ஊடாக மாத்­தி­ரம் பெண்­கள் பிர­நி­தித்­து­வத்­தில் திருப்தி அடைய முடி­யாது. அர­சி­ய­லி­னுள் பெண் பிர­தி­நி­தி­கள் அதி­க­ரிக்க மேலும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

வேட்­பு­ம­னுத் தாக்­கல் செய்­யும் போது தொகு­தி­க­ளுக்கு 10 பெண்­களை கட்­டா­ய­மாக நிய­மிக்க வேண்­டும். மேலும் 50 பெயர்­கள் உள்­ள­டக்­கப்­பட வேண்­டும். இது சிறந்த ஏற்­பா­டா­கும்.

ஜன­வரி மாதம் உள்­ளூ­ராட்சி தேர்­த­லும் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்­த­லும் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

புதிய தேர்­தல் முறைமை மற்­றும் பெண்­கள் பிர­தி­நி­தித்­து­வம் தொடர்­பில் மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தும் செய­ல­மர்வு நடத்­து­வற்­காக அமைச்­ச­ர­வை­யில் சிறப்­புப் பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பிக்­க­வுள்­ளேன – –என்­றார்.

You might also like