விவ­சா­யி­க­ளுக்கு உத­வித்­திட்­டம்

வடக்கு மாகா­ணத்­தின் தேசிய உற்­பத்தி வார நிகழ்­வில் கிராம மட்­டத்­தில் விவ­சாயத்தை உயர்த்­தும் நோக்­கில் பல்­வேறு உத­வித் திட்­டங்­கள் வழங்­கப்­ப­டும் -என்று மாகாண விவ­சாய அமைச்­சின் செய­லா­ளர் சி.சத்­தி­ய­ சீ­லன் தெரி­வித்­தார்.

இது­பற்றி அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தேசிய உற்­பத்­தி­வார நிகழ்­வு­களை யாழ்ப்­பா­ணம் புத்தூர் பகு­தி­யில் நாளை மறுதினம் சனிக்கிழமை நடத்தத் தீர்­மானிக்கப்பட்டுள்ளது.

நிகழ்­வில் விவ­சா­யி­க­ளுக்கு பல உத­வித் திட்­டங்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. விவ­சா­யம் என்­பது எமது மாகா­ணத்­தின் முதன்மை வாழ்­வா­தா­ரம். ஆகவே அவர்­க­ளைத் தட்­டிக்­கொ­டுக்க வேண்­டும். விவ­சாய உற்­பத்தி சார்ந்த இந்த நிகழ்­வில் 40க்கும் மேற்­பட்ட பய­னா­ளி­க­ளுக்கு உத­வித் திட்­டங்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

மாவட்­ட­ ரீ­தி­யில் ஒரு பய­னா­ளிக்கு 3 இலட்­சத்து 60 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான சூரி­ய­ சக்­தி­யில் இயங்­கும் நீர் இறைக்­கும் இயந்­தி­ரம் மானி­ய­மு­றை­யில் வழங்­கப்­ப­டும். இதற்கு அரை­வா­சிப் பணம் செலுத்­த­வேண்­டும்.

15பேருக்கு மர­முந்­தி­ரிகை மரங்­கள் வழங்­கப்­ப­டும். இதற்காக வீட்­டுத்­தோட்­டம், மற்­றும் பெருந்­தோட்­டப் பய­னா­ளி­கள் 15 பேர் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

5 பேருக்கு தென்­னங்­கன்­று­கள் வழங்­கப்­ப­டும் இவை­ த­விர விவ­சா­யக் கிண­று­களை சீர­மைப்­புச் செய்­த­வர்­க­ளுக்­கான காலோ­சை­க­ளும், நவீன விவ­ சா­யத்­திற்­கான 5வகை இயந்­தி­ரங்­க­ளும் வழங்­கப்­ப­டும்.

இதற்­காக அரச தலை­வ­ரின் செய­ல­கம் 25 இலட்­சம் ரூபாவை வழங்­கி­யுள்­ளது – என்­றார்.

You might also like