விதை­நெல்­லுக்­குத் தட்­டுப்­பாடு கிளி. விவ­சா­யி­கள் திண்­டாட்­டம்

மாவட்­டச் செய­ல­ரி­டம் கோரிக்கை

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பெரும்­போக விதைப்பு நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் எதிர்­வ­ரும் 31ஆம் திக­திக்கு முன்­னர் முடி­வு­றுத்­தப்­ப­ட­ வேண்­டும் என மாவட்ட விவ­சா­யக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும் விவ­சா­யி­கள் விதை நெல்­லைப் பெற்­றுக்­கொள்­வ­தில் பெரிய நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

தமக்கு விதை நெல்­லைப் பெற்­றுத் தரு­மாறு மாவட்­டச் செய­லா­ள­ரி­டம் அவர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

விவ­சா­யக் குழு கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் செவ்­வாய்க் கிழமை மாவட்­டச்­செ­ய­லா­ளர் சுந்­த­ரம் அரு­மை­நா­ய­கம் தலை­மை­யில் இடம்­பெற்­றது.

இதன்­போதே விவ­சா­யி­கள் மேற்­படி கோரிக்­கையை விடுத்­துள்ளனர்.

இர­ணை­ம­டுக்­கு­ளம், அக்­க­ரா­யன்­கு­ளம், வன்­னே­ரிக்­கு­ளம், கரி­யா­லை­நா­க­ப­டு­வான்­கு­ளம், குட­ மு­ருட்­டிக் குளம், கல்­ம­டுக்­கு­ளம் மற்­றும் புது­மு­றிப்­புக்­கு­ளம் ஆகிய நீர்ப்­பா­ச­னக் குளங்­க­ளின் கீழ் பெரும்­போக விதைப்­பு­ வே­லை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப் பிட்ட திக­திக்­குள் விதைப்பு நிறை­வு ­செய்­யப்­பட வேண்­டும். குளங்­க­ளின் நீர்­மட்ட உயர்­வுக்கு ஏற்ப நீர் விநி யோகம் இடம்­பெ­றும்.

இர­ணை­ ம­டுக்­கு­ளத்­தில் பத்­த­டிக்கு நீர் உயர்ந்த பின்­னரே முத­லா­வது விநி­யோ­கத்தை ஆரம்­பிப்­பது எனத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது.

இதே­வேளை மாவட்­டத்­தில் விதை நெல்­லுக்கு நெருக்­கடி இருப்­ப­தாக விவ­சா­யி­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த சிறு­போ­கத்­தில் அறு­வடை செய்­யப்­பட்ட நெல்லை விதை நெல்­லா­கப் பயன்­ப­டுத்த முடி­யாது.

சிறு­போ­கச் செய்­கை­யின் இறு­தி­நே­ரத்­தில் குளங்­க­ளில் நீர்­மட்­டம் குறை­வ­டைந்­த­ தன் கார­ண­மாக நெற் செய் கையில் பாதிப்பு ஏற்­பட்­டது. அவை அறு­வ­டை­யி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

இத­னால் அதி­க­ள­வான விவ­சா­யி­கள் தமது நெல்லை விதை நெல்­லுக்­குப் பயன்­ப­டுத்த முடி­யாத நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த இரு ஆண்­டு­க­ளாக கிளி­நொச்சி மாவட்­டத்­தில் நில­வும் வறட்­சி­யான கால­நிலை கார­ண­மாக நெற்­செய்கை முழு­மை­யாக வெற்­றி­ய­ளிக்­க­வில்லை என சுட்­டிக் காட்­டப்­பட்­டது.

எனவே, விதை நெல்­லைப் பெற்­றுத் தரு­வ­தற்கு மாவட்­டச் செய­லர் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என­வும் விவ­சா­யி­கள் கோரி­னர்.
அதே­நே­ரம் இங்கு கால் ந­டை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான கால அட்­ட­வ­ணை ­யும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

எதிர்­வ­ரும் 15ஆம் திகதி தொடக்­கம் 28-.02-.2018 வரை கால்­ந­டை­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என­வும் அறி­விக்­கப்­பட்­டது.

இக் கூட்­டத்­தில் மாவட்ட பிரதி விவ­சா­யப் பணிப்­பா­ளர், கரைச்சி, பளைப் பிர­தேச செய­லா­ளர்­கள், நீர்ப்­பா­சன பிர­திப்­ப­ணிப்­பா­ளர், கம­நல உதவி ஆணை­யா­ளர், கமக்­கார அமைப்­பு­க­ளின் தலை­வா்­கள் உள்­ளிட்ட பலா் கலந்­து­ கொண்­ட­னா்.

 

You might also like