அரசியல் கைதிகளின் விடயத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கை இல்லை

வடக்கு சுகா­தார அமைச்­சர் அதிருப்தி

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் அகிம்­சைப் போராட்­டங்­கள் முடி­வுக்கு கொண்டு வரப்­ப­டு­கின்­றன.

தவிர அவர்­க­ளின் விடு­தலை தொடர்­பாக ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொள்­ள­வில்லை – என வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் மருத்துவ கலா­நிதி ஜீ.குண­சீ­லன் தெரி­வித்­தார்.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் நிலை தொடர்­பாக மன்­னா­ரில் வைத்து அவர் நேற்றுக் கருத்­துத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் எமது தமிழ் அர­சி­யல் கைதி­க­ள் தொடர்ந்து போரா­டு­கி­றார்­கள். சில­ரது உடல்­நிலை கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க் கப்பட்­டுள்­ள­னர்.

நீர் ஆகா­ரம் கூட உண்­ணா­மல் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். இதனால் சிறு நீர­கங்­கள் கூட பாதிப்­ப­டை­யும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

பல ஆண்­டு­க­ளாக தமிழ் அர­சி­யல் கைதி­கள் தமது விடு­த­லைக்­காக பல்­வேறு போராட்­டங்­களை மேற்­கொண்டு வந்­தார்­கள்.

எனி­னும் அவை வாக்­கு­று­தி­க­ளி­னால் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ள­னவே தவிர ஆக்க பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை அர­சும், ஏனைய அர­சி­யல்­வா­தி­க­ளும் கூட எடுக்­க­வில்லை.

இதில் எங்­க­ளு­டைய பங்­க­ளிப்பு குறை­வா­ன­தாக உள்­ளதா என்­கின்ற சந்­தே­க­மும் எழு­கின்­றது.

தவற விடாதீர்கள்:  வட்­டுக்­கோட்­டை­யி­லி­ருந்து மாற்­றத்தை ஆரம்­பிப்­போம்

-நாட்­டில் போர் முடி­வ­டைந்து பல ஆண்­டு­க­ளா­கி­விட்­டன. தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை திட்­ட­மிட்ட வகை­யில் தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவே நாங்­கள் கரு­து­கின்­றோம்.

இது­தொ­டர்­பில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ய­வேண்­டும்–என்றார். –

You might also like