தொண்டராசிரியர் நியமன விவகாரத்தில் சிக்கல்

பெயர்ப் பட்டியலில் நியமனம்

வடக்கு மாகாண தொண்­டர் ஆசி­ரி­யர் நிய­மன விவ­கா­ரம் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளைத் தோற்­று­வித்­துள்­ளது.

நீண்­ட­கா­லம் பாட­சா­லை­க­ளில் தொண்­டர்­க­ளா­கச் சேவை­யாற்­றிய ஆசி­ரி­யர்­க­ளுக்­கான நிரந்­தர நிய­ம­னம் இழு­பறி நிலை­யில் இருந்து தற்­போது நிய­ம­னப் யெர்ப் பட்­டி­யல் வரை சென்­றுள்­ளது.

எனி­னும் தொண்­ட­ரா­சி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­றிய பலர் சம்­ப­வத் திரட்­டுப் புத்­த­கத்­தைக் கார­ணம் கூறி கொழும்பு அர­சால் நிய­ம­னத்­தில் இருந்து புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­னர். சில­ரது பெயர்­களே நிரந்­தர நிய­ம­னத்­துக்­கா­கத் தெரிவு செய்­யப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­த­நி­லை­யில் தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ளாக தேர்­வு­செய்­யப்­பட்­ட­வர்­கள் பட்­டி­ய­லில் இரா­ணு­வத்­தி­ன­ரின் சிவில் பாது­காப்பு முன்­பள்­ளி­க­ளில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­க­ளின் பெய­ரும் இருப்­ப­தாக முறை­யி­டப்­பட் டுள்­ளது.

வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளில் தொண்­ட­ர­டிப்­ப­டை­யில் பணி­பு­ரி­யும் ஆசி­ரி­யர்­களை நிரந்­த­ர­ மாக்­கும் நோக்­கில் நேர்­மு­கத்­தேர்வு இடம்­பெற்­றது. இறுதி செய்­யப்­பட்ட 182 தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ளின் பெயர்­கள் வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சுக்கு கடந்­த­வா­ரம் அனுப்பி வைக்­கப்­பட்­டன.

இவ்­வாறு அனுப்­பப்­பட்ட பட்­டி­ய­லில் உள்ள குறை­பாடு­ கள் தொடர்­பில் தற்­போது சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

தெரிவு செய்­யப்­பட்ட தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ளு­டைய நிய­மனத்­தை­யும் வடக்கு கமா­காண கல்வி அமைச்சு இடை­நி­றுத்­தி­யுள்­ளது.

இதன் பிர­கா­ரம் வடக்கு மாகா­ணத்­தில் படை­யி­ன­ரால் நடத்­தப்­ப­டும் சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ ளத்­தின் கீழ் இயங்­கும் முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் இரு­வ­ரின் பெயர் விப­ரங்­கள் உள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ ளத்­தின் கீழான பணி என்­ப­தும் ஓர் நிரந்­தர அரச உத்­தி­யோ­க­மா­கவே கணிக்­கப்­ப­டு­கி­றது.

இந்த­ நிலை­யில் ஒரு திணைக்­க­ளத்­தில் இருந்து பிறி­தொரு திணைக்­க­ ளத்­துக்கு நேர்­மு­கத் தேர்­விற்­குச் செல்­வ­தா­னால் திணைக்­க­ளத் தலை­வ­ரின் சிபா­ரி­சு­ட­னேயே செல்­ல­வேண்­டும் என்­பதே விதி­மு­றை­யா­கும்.

அவ்­வாறு இருக்­கும் போது இவர்­க­ளு­டைய பெயர்­கள் தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ளு­டைய நிய­மப் பெயர்ப்­பட்­டி­ய­லில் உள்­ள­வாங்­கப்­பட்­டுள்­ளது அனை­வ­ரி­டத்­தி­லும் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

இது தொடர்­பில் உரி­ய­வர்­கள் கவ­ன­மெ­டுக்க வேண்­டும் என சு ­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

You might also like