உள்ளூ­ராட்­சி­ சபை உரு­வாக்­கம்; ஆய்­வு­கள் மக்­கள் பார்­வைக்கு

வடக்கு மாகா­ணத்­தின் ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் புதிய உள்­ளூ­ராட்சி சபை­கள் உரு­வாக்­கம் மற்­றும் தர­ மு­யர்த்­தல் தொடர்­பான ஆய்­வு­க­ளின் முடி­வு­கள் விரை­வில் மக்­கள் பார்­வைக்கு வைக்­கப்­ப­டும் என தலை­மைச் செய­லா­ளர் அ.பத்­தி­நா­தன் தெரி­வித்­தார்.

மாவட்­டங்­கள் தோறும் இயங்­கிய ஆய்­வுக் குழுக்­கள் தற்தபோது மது முடி­வு­களை வடக்கு மாகாண தலை­மைச் செய­ல­ருக்கு அனுப்­பி­வைக்­கின்­றன. இது­தொ­டர்­பில் கேட்­ட­போதே அவர் மேற் கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்­கில் 6 பிர­தேச செய­லா­ளர் பிரி­வு­க­ளுக்கு புதிய சபை­களை உரு­வாக்­கு­வ­தற்­கும், 6 சபை­களை தர­மு­யர்த்­து­வ­தற்­கு­மாக மாவட்­டச் செய­லா­ளர்­கள் தலை­மை­யில் குழுக்­கள் நிய­மிக்­கப்­பட்­டன.

இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட குழுக்­க­ளுக்கு அந்­தந்த மாவட்­டத்­தின் செய­லா­ளர்­களே தலை­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­னர். மாகாண உள்­ளூ­ராட்சி அமைச்­சின் செய­லா­ள­ரும் , தலை­மைச் செய­லா­ளர் சார்­பில் மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ள­ரும், மாவட்ட உள்­ளூ­ராட்சி உதவி ஆணை­யா­ளர் , மாவட்ட புள்ளி விவர உத்­தி­யோ­கத்­தர் மற்­றும் நில அள­வைத் திணைக்­கள அதி­காரி என தலா ஆறு­பேர் அதில் அங்­கம் வகித்­த­னர்.

இந்தக் குழு­வி­னர் தமது ஆய்­வு­களை தற்­போது சமர்ப்­பித்து வரு­கின்­ற­னர்.
இதன் முடி­வு­களை அமைச்­சின் செய­லா­ள­ருக்கு அனுப்­பு­வ­தற்கு முன்­னர் உள்ளூ­ராட்­சி­ ச­பை­க­ளில் மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­ப­டும்.

யாழ்ப்­பா­ணத்­தில் மரு­தங்­கேணி, கிளி­நொச்­சி­யில் கண்­டா­வளை, முல்­லைத் தீவில் ஒட்­டு­சுட்­டான் , முல்­லைத்­தீவு நக­ரம், மன்­னார் மாவட்­டத்­தில் மடு போன்ற பிர­தேச செய­லா­ளர் பிரி­வு ­க­ளில் புதிய சபை­க­ளும்,
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் வலி. தெற்கு, கர­வெட்டி மற்­றும் மானிப்­பாய், நல்­லூர் ஆகி­ய­வற்­று­டன் காங்­கே­சன்­துறை சபை­க­ளோடு வவு னியா நகர சபை ஆகி­ய­வற்றை தர­மு­யர்த்­து­வது தொடர்­பி­லும் ஆய்­வு­கள் இடம்­பெற்­றன – – என்­றார்.

You might also like