வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இன்று காலை நுணாவில் பகுதியில் இடம்பெற்றது.

படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like