அரசியல் கைதிகளுக்கு ஆதரவு கொழும்பிலும் நாளை ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கொழும்பிலும் நாளை ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

கொழும்பு தொடருந்து நிலையத்துக்கு முன்னால் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான இயக்கத்தின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பல்வேறு அமைப்புக்களின் ஆதரவுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like