தொடருந்து வருகின்ற நேரம் கடவையை மூடாத காப்பாளர்

பளை – முகமாலைப் பகுதியில்

பளை–முக­மாலை பகுதிக் தொட­ருந்­துக் கடவை காலை நேரங்­க­ளில் மூடப்­ப­டு­வ­ தில்லை என மக்­கள் குற்­றஞ் சாட்­டு­கின்­ற­னர்.

அங்கு கடவைக் காப்­பா­ளர் இருக்­கி­றார். எனி­னும், தொட­ருந்து வரும்­வே­ளை­க­ளில் கடவை மூடப்­ப­டு­வ­தில்லை.

கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்­னர் கடவை மூடப்­ப­டாத கார­ணத்­தால் அங்கு ஒரு விபத்து ஏற்­ப­டும் ஏது­நிலை தோன்­றி­யது.

இருப்­பி­னும் விரைந்து செயற்­பட்ட அந்த நபர் விபத்­தில் இருந்து தப்­பித்­தார் என மக்­கள்­தெ­ரி­விக்­கின்­ற­னர்.

மாதாந்தச் சம்­ப­ளம் பெறும் காப்­பா­ளர் தனது பணியை சரி­வ­ரச் செய்­ய­வேண்­டும்.
காலை நேரங்­க­ளில் அதிக கவ­னத்­து­டன் கட­வை­களை மூடி மக்­க­ளைப் பாது­காக்­க­வேண்­டும்.

அவ்­வா­றில்­லா­மல் உதா­சீ­ன­மாக செயற்­ப­டக்­கூ­டாது. இது­தொ­டர்­பாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்­க­வே­ண­டும் – எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like