காதலனைக் கரம்பிடிக்க மாந்திரீகவாதியை நாடிய பெண்

காத­லனை மந்­தி­ரத்­தால் வசப்­ப­டுத்­தும் முயற்­சிக்­கா கத் திரு­டிய பெண் மற்­றும் பெண் மாந்­தி­ரீகவாதி உள்­ளிட்ட 3பேர் பொலி­ஸா­ ரால் கைது செய்­யப்­பட்டனர்.

பொலி­ஸார் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது:

‘நினைப்­ப­தெல்­லாம் கிடைக்­கும்’ என்று பத்­தி­ரி­கை­க­ளில் விளம்­ப­ரம் வந்­துள்­ளது. இந்த விளம்­ப­ரத் ­தைப் பார்த்த பெண், எனது காத­லன் எனக்குக் கிடைக்­க­ வேண்­டும். அத­னைச் செய்து தர­மு­டி­யுமா?’ என்று விளம்­ப­ரத்­தி­லி­ருந்த அலை­பேசி இலக்­கத்­து­டன் தொடர்­பு­கொண்டு கேட்­டுள்­ளார்.

செய்­ய­மு­டி­யும் என்­றும் தனது கணக்­குக்கு 5 ஆயி­ரம் ரூபா பணத்தை வைப்­பி­லி­டு­மாறும் தொடர்­பு­கொண்ட பெண்­ணி­டம் கூறி­யுள்­ளார்.

பணம் வைப்­பிலிட்ட பின்­னர் காத­லனைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காகக் காளி அம்­ம­னுக்குப் பூசை செய்ய வேண்­டும் என்று கூறி அதற்­கும் மேல­தி­க­மாக விளம்­ப­ரம் பிர­சு­ரித்த பெண் பணம் கோரி­யுள்­ளார்.

மேல­திக பணம் இல்­லாத நிலை­யில் அத­னைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காக விளம்­ப­ரத்­தைப் பார்த்து தொடர்பு கொண்ட பெண் தான் வேலை செய்த வீட்­டில் தங்க நகை­க­ளைத் திரு­டி­யுள்­ளார்.

நகைத் திருட்­டுத் தொடர்­பில் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு கிடைத்­தது. அது தொடர்­பில் விசா­ரணையை முன்­னெ­டுத்­த­போதே, விளம்­ப­ரத்தைப் பிர­சு­ரித்த பெண், அவ­ருக்கு உத­விய இளை­ஞன், விளம்­ப­ரத் ­தைப் பார்த்துத் தொடர்பு கொண்ட பெண் மூவ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

விளம்­ப­ரத்­தைப் பிர­சு­ரித்த பெண், யாழ்ப்­பா­ணம், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாக வும், அவரது கணக்கில் 4 லட்சம் ரூபா பணம் உள்ள தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like