ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரும் அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வார்

சுமந்திரன், ஜயம்பதியுடன் 20ஆம் திகதி பேச்சு

புதிய அர­ச­மைப்பு முயற்சி தொடர்­பாக, இலங்கை வந்­துள்ள ஐ.நாவின் சிறப்பு நிபு­ணர் பப்லோ டி கிறிப்­பும் ஆரா­ய­வுள்­ளார்.

எதிர்­வ­ரும் 20ஆம் திகதி கொழும்­பில் முக்­கிய சந்­திப்பை அவர் நடத்­த­ வுள்­ளார்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தின் வழி­ந­டத்­தல் குழு­வில் அங்­கம் வகிக்­கும் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சும ந் ­திரன் ஆகி­யோ­ரி­டம் இடைக்­கால அறிக்­கை­யி­லுள்ள விட­யங்­கள் தொடர்­பில் கேட்­ட­ றி­ய­வுள்­ளார்.

இரா.சம்­பந்­தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பை­யும் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ டி கிறிப் கொழும்­பில் தனி­யா­கச் சந்­தித்­துப் பேச்சு நடத்­த­வுள்­ளார்.

தவற விடாதீர்கள்:  அரசின் இயலாமையின் வெளிப்பாடே- இராணுவத்தினரின் களமிறக்கம்!!

You might also like