அதிகாரப் பகிர்வினால்நாடாளுமன்று பலவீனமாகும்

இந்த நிலை வேண்டாம் என்கின்றது மகிந்த அணி

வடக்கு – – கிழக்குக்கு வழங்கப்படவுள்ள அதிகாரப் பகிர்வால்நா டாளுமன்றம் பலவீனமடையும். நாட்டின் எல்லாத் துறையும் குழப்பம் அடையும். இவ்வாறு மகிந்த அணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்ததாவது:

உலகில் பல நாடுகளில் கூட்டாட்சி முறைமை உள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கூட்டாட்சி முறைமை ஆட்சி முறைமையைக் கொண்ட நாடுகள்தான்.
ஆனால், அந்த நாடுகள் பிரிந்து செல்லவில்லை. ஆனால், வடக்கு -– கிழக்குக்கு வழங்கப்படவுள்ள கூட்டாட்சி முறைமை பாரதூரமானது. நாட்டை இரண்டாகப் பிரிக்கக்கூடியது.

அரசமைப்பை உருவாக்கும் வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையைப் பார்க்கும்போது இந்த ஆபத்து தெளிவாகத் தெரிகிறது.

எமது யோசனைகள் கூட உள்வாங்கப்படவில்லை. அவ்வாறு உள்வாங்கப்பட்டிருந்தால் நாம் பயப்பட வேண்டிய தேவை இல்லை.

ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு முதலமைச்சரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த நிலைமை ஏகாதிபத்தியத்துக்கு இட்டுச் செல்லும். முதலமைச்சரின் செயலாளரைக்கூட முதலமைச்சர்தான் நியமிப்பார்.

தவற விடாதீர்கள்:  12 வருடங்களுக்குப் பின் சந்திரிகா களம் குதிப்பு !

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டு வடக்கு -– கிழக்கும் இணைக்கப்படும்.

வடக்கு-– கிழக்குக்கு வழங்கப்படவுள்ள இவ்வாறான அதிகாரப் பகிர்வால் நாடாளுமன்றம் பலவீனமடையும்.

இதனால் நாட்டின் எல்லாத் துறையும் குழப்பம் அடையும். அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் – –  என்றார்.

You might also like