கூட்டமைப்புடன் உடன்பட முடியாது- ஹெல உறுமய

அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வைக்­கும் நிலைப்­பாட்­டோடு ஒரு­போ­தும் உடன்­பட முடி­யாது. அவ்­வாறு உடன்­பட்­டால் இனங்­களி­டையே பிளவு ஏற்­ப­டும். இவ்­வாறு ஜாதிக ஹெல உறு­மய தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் மேல் மாகாண சபை உறுப்­பி­னர் நிசாந்த வர்­ண­சிங்க தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­ச­மைப்பு மற்­றும் அர­சி­யல் தீர்வு தொடர்­பில் அர­சி­யல் கட்­சி­கள் பல முன்­வைக்­கும் நிலைப்­பா­டு­க­ளு­டன் ஓர­ள­வே­னும் ஒத்­துப்­போக முடி­யும்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைக்­கும் நிலைப்­பா­டு­ தான் பிரச்­சி­னை­யாக உள்­ளது. அத­னது ஒரு கோரிக்­கை­யை­யே­னும் எம்­மால் ஏற்க முடி­யா­மல் உள்­ளது.

வடக்கு – – கிழக்கு இணைப்பு, அதி­கா­ரப் பகிர்வு தொடர்பில் மங்­கள முன­சிங்­க­வின் அறிக்­கையை ஏற்க வேண்­டும் மற்­றும் திஸ்­ஸ­வி­தா­ ர­ண­வின் சர்வ கட்சி குழு அறிக்­கையை ஏற்க வேண்­டும் போன்ற நாட்­டுக்கு விரோ­த­மான கொள்­கை­க­ளையே கூட்­ட­மைப்பு கொண்­டுள்­ளது.

இந்­தக் கட்­சி­யு­டன் நாம் எப்­படி இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது?

வடக்­கு-­– கி­ழக்கு மக்­க­ளின் நீண்ட காலப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வை முன்­வைக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் அதி­கா­ரப் பகிர்வு கோரப்­ப­டு­கின்­றது.

பிரச்­சினை என்­னவோ அதற்­குத்­தான் தீர்வை வழங்க வேண்­டும். நாட்­டுக்கு விரோ­த­மான முறை­யில் தேவை­யற்ற கோரிக்­கை­களை ஏன் முன்­வைக்க வேண்­டும்?
கூட்­ட­மைப்­பின் கோரிக்­கையை–நிலைப்­பாட்டை நாம் ஏற்­றுக்­கொண்­டால் இனங்­க­ளி­டையே நிச்­ச­யம் பிளவு ஏற்­ப­டும்.

இது நாட்­டின் எதிர்­கா­லத்­துக்கு நல்­ல­தல்ல. பிரச்­சி­னை­கள் என்­னவோ அவை மட்­டுமே ஆரா­யப்­பட வேண்­டும்.

அவற்­றுக்கு மாத்­தி­ரமே தீர்வு வழங்­கப்­பட வேண்­டும். அதற்கு அப்­பால் செல்­லக்­கூ­டாது -– என்­றார்.

You might also like