கொள்ளையடிப்பதில் அரசுகளிடையில் எந்த வேறுபாடுமில்லை

மக்கள் விடுதலை முன்னணி சாடல்

முன்­னைய அரசு இலங்­கை­யில் பணத்­தைக் கொள்­ளை­ ய­டித்துப் பன்­னாட்டு வங்­கி­க­ளில் வைப்­பி­லிட்­ட­தாகக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

இந்த அரசு பன்­னாட்டு வங்­கி­க­ளில் இருந்து பணத்­தைக் கொள்­ளை­ய­டித்து இங்கு சேர்­க்கின்­றது. இரண்டு அர­சு­க­ளும் இந்த விட­யத்­தில் ஒற்­று­மை­யாக உள்­ள­னர்.

இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தாய்­வான் வங்­கி­யில் இடம்­பெற்ற மோசடி தொடர்­பில், அந்த நாட்­டின் சட்­டத்துக்கும் நாம் கட்­டுப்­பட வேண்­டும்.

இப்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள சமை­யல் எரி­வாயு நிறு­வ­னத்­தின் தலை­வர் சலீல முன­சிங்ஹ முன்­னாள் அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வின் நெருங்­கிய நண்­பர். இவரை லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வ­னத்­தின் தலை­வ­ராக்­கி­யது யார் என்­ப­தைக் கண்­ட­றி­ய­வேண்­டும்.

அதே­போல் இவ்­வ­ளவு தொகை­யை விசா­ர­ணை­யின்றி வங்கிப் பரி­மாற்ற அனு­மதி கொடுத்­தது யார்? இதில் ஒரு சிலர் மட்­டுமே தொடர்­பு­பட்­ட­வர்­கள் அல்ல. இதன் பின்­ன­ணி­யில் பெரிய குற்­ற­வா­ளி­கள் உள்­ள­னர். அவர்­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும்.
இது தொடர்­பில் தெளி­வான உறு­தி­யான சாட்­சி­யங்­கள் எம்­மி­டம் இல்லை.

ஆனால் நேரடி சாட்­சி­களைப் போலவே நேர­டி­யற்ற சாட்­சி­யங்­க­ளை­யும் கவ­னத்­தில் எடுக்­க­வேண்­டும்.

அவ்­வா­றான சாட்­சி­யங்­களைக் கவ­னித்­தால் அவரை யார் லிட்ரோ சமை­யல் எரி­வாயு நிறு­வ­னத்­தின் தலை­வ­ராக நிய­மித் ­தது என்­பது தெரி­யும்.

கடந்த தேர்­த­லின் போது சில செய்­தி­யா­ளர் சந்­திப்­பு­க­ளில், அர­சி­யல் மேடை­க­ளில் அவர் உள்­ளார். அதற்­கான ஆதா­ரங்­கள் உள்­ளன. சில அர­சி­யல் கட்­சி­க­ளு­டன் அவர் தொடர்­பில் உள்­ளார். இந்­தச் சாட்­சி­யங்­களைக் கவ­னித்­தால் அவர் யாரு­டன் தொடர்பு கொண்­டுள்­ளார் என்­பதை இல­கு­வாக அடை­யா­ளம் காண­மு­டி­யும்.

இந்­தச் சாட்­சி­யங்­க­ளின்படி பிர­பல்­ய­மான அர­சி­யல்­வாதி ஒரு­வரின் தொடர்பு உள்­ளது என்பது தெரிவிக்கப்படு மாயின் சந்தேகத்துக்கு இடமில்லாது அவர் ரவி கருணாநாயக்க என் பதை உறுதிப்படுத்த முடியும் – – என்றார்.

You might also like