நாடு பிரிபடக்கூடாதுஅதிகாரம் பகிரலாம்

நாட்டைப் பிரிக்­கா­மல் வடக்கு -– கிழக்­குக்கு அதி­கா­ரப் பகிர்வை வழங்­கும் யோச­னையை மக்­கள் விடு­தலை முன்­னணி ஒரு­போ­தும் எதிர்க்­காது என்று அந்­தக் கட்சி தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நலிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்­த­தா­வது:

எமது நாடா­ளு­மன்­றத்­துக்கு வயது 70. இந்த 70 வரு­டங்­க­ளில் நாம் மூன்று அர­ச­மைப்­பைக் கண்­டு­விட்­டோம். இந்த அர­ச­மைப்­புக்­கள் எவற்­றா­லும் நாட்­டின் முக்­கிய பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க முடி­ய­ வில்லை. இந்த நிலை­யில்­தான் நான்­கா­வது அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன.

நாடா­ளு­மன்றைப் பிர­தி­நி­தித்­து­வப் ப­டுத்­தும் அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைத்து வழி­ந­டத்­தல் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது. அந்தக் குழு 73 தட­வை­கள் கூடி இடைக்­கால அறிக்­கை­யைத் தயா­ரித்துச் சமர்ப்­பித்­துள்­ளது.

நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர் முறைமை, புதிய தேர்­தல் மற்­றும் அதி­கா­ரப் பகிர்வு போன்ற மூன்று விட­யங்­களை இந்தக் குழு கையாண்­டுள்­ளது. இதற்கு மேல­தி­க­மாக ஆறு உப குழுக்­க­ளின் அறிக்­கை­யும் இதற்கு முன் நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எந்­த­வோர் அர­ச­மைப்­பா­லும் இது­வரை எந்­த­வோர் பிரச்­சி­னை­யை­ யும் தீர்க்க முடி­ய­வில்லை. அந்த அர­ச­மைப்­பு­க­ளால் பிரச்­சி­னை­கள் அதி­க­ரித்­துத்­தான் உள்­ளன. 2015 ஆம் ஆண்டு மக்­கள் ஆணை, எந்­த­ வொரு கட்­சி­யும் தனித்து ஆட்சி அமைக்க முடி­யாத நிலமை போன்­ற­ வற்­றால் ஓர­ள­வே­னும் பிரச்­சி­னை­ க­ளைத் தீர்த்­துக்­கொள்ள முடி­யும். சன­நா­ய­கத்தை வெல்ல முடி­யும் என்று நாம் நம்­பு­கி­றோம்.

இத­னால்­தான் நாம் நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர் முறை­மையை ஒழிப்­ப­தற்­கா­கப் போரா­டு­கி­றோம். புதிய தேர்­தல் முறை­மையை நாம் ஆத­ரிக்­கின்­றோம். சன­நா­ய­கத்­தைப் பலப்­ப­டுத்­தும் வியூ­கத்தை நாம் ஆத­ரிக்­கின்­றோம்.

நாட்­டைப் பிரிக்­கா­மல் அதி­கா­ரப் பகிர்வை வழங்­கும் யோச­னையை மக்­கள் விடு­தலை முன்­னணி ஒரு­போ­தும் எதிர்க்­காது. எல்­லா­வற்­றை­யும் விட 2015இல் வழங்­கப்­பட்ட மக்­கள் ஆணைக்கு ஏற்ப நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர் முறைமை நீக்­கப்­பட வேண்­டும் என்ற நிலைப்­பாட்டை நாம் விட்­டுக் கொடுக்­க­மாட்­டோம்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டதே நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர் முறை­மையை நீக்­கு­வ­தற் ­கா­கத்­தான். அவ­ரால் விலக முடி­யாது. ஆனால், அதற்கு உடன்­­படப்­போ­வ­தில்லை என்று சுதந்­தி­ரக் கட்சி தெரி­வித்­துள்­­ள­து. அவர்­கள் 2015ஆம் ஆண்டு மக்­கள் ஆணைக்கு ஏற்­பவே செயற்­பட வேண்­டும் – – என்­றார்.

You might also like