இலங்கையில் பொருளாதார வளர்ச்சி

2017-–2018ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் இலங்­கை­யின் பொரு­ளா­தார வளர்ச்சி நம்­பிக்­கை­யூட்­டக் கூடிய வகை­யில், இருக்­கும் என்று பன்­னாட்டு நாணய நிதி­யம் மதிப்­பீடு செய்­துள்­ளது.

உலகப் பொரு­ளா­தார கண்­ணோட்­டம் என்ற நாணய நிதி­யத்­தின் அறிக்கை வொசிங்­ட­னில் நேற்­று­முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்டு இலங்­கை­யின் பொரு­ளா­தார வளர்ச்சி 4.7 சத­வீ­த­மாக நம்­பிக்­கை­யூட்­டக் கூடிய வகை­யில் இருக்­கும் என்று பன்­னாட்டு நாணய நிதி­யம் எதிர்வு கூறி­யுள்­ளது.

2018ஆம் ஆண்­டில், 4.8 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும் என்­றும் கணிக்­கப்­பட்­டுள்­ளது.
இயற்கை அழி­வு­கள் மற்­றும் பின்­தங்­கிய சீர்­தி­ருத்­தங்­களால், இந்த ஆண்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி 4.5 சத­ வீ­தத்­துக்குக் குறை­வா­கவே இருக்­கும் என்ற மத்­திய வங்­கி­யின் கணிப்­புக்கு மாறாக இந்­தக் கணிப்பு அமைந்­துள்­ளது.

தெற்­கா­சி­யப் பிராந்­தி­யத்­தில் உள்ள நாடு­க­ளின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யு­டன் ஒப்­பீடு செய்­யும் போது, இலங்கை பின்­தங்­கிய நிலை­யில் உள்­ளது.

தவற விடாதீர்கள்:  தனித்­துச் செல்­லும் மகிந்த ஒரு­போ­தும் வெல்லமாட்டார்

You might also like