கைது செய்துவிட்டார்கள்!- நாமல் பதற்றம்

அமை­தி­யா­கப் போராட்­டம் நடத்­திய எம்மைப் பொலி­ஸார் கைது செய்­தி­ருப்­ப­தாக, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் மூத்த புதல்­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ச, ஐ.நா. மனி­த­உ­ரிமை ஆணை­யா­ள­ரி­ட­மும், அமெ­ரிக்­கா­வி­ட­மும் முறை­யிட்­டுள் ­ளார்.

இது­தொ­டர்­பாக நேற்­று­முன்­தி­னம் கீச்­ச­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

‘தேசிய சொத்­துக்­களை விற்­ப­தற்கு எதி­ராக அமை­தி­யா­கப் போராட்­டம் நடத்­திய எம்­மில் 4 பேரைப் பொலி­ஸார் கைது செய்­துள்­ள­னர். எதிர்ப்­புக் குரல்­களை ஒடுக்­கு­கின்­ற­னர்’ என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளர், ஐ.நாவுக்­கான அமெ­ரிக்கத் தூது­வர் நிக்கி ஹாலே ஆகி­யோரை நோக்கி முறை­யீடு செய்து கீச்­ச­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

உள்­நாட்டு விவ­கா­ரங்­க­ளில் ஐ.நா., அமெ­ரிக்கா உள்­ளிட்ட வெளி­நாட்­டுத் தலை­யீ­டு­க­ளுக்கு எதி­ராகக் கடு­மை­யாகக் குரல் கொடுத்து வந்த மகிந்த ராஜ­பக்ச அணி­யி­னர், தம்­மீ­தான நட­வ­டிக்­கைக்கு எதி­ராக ஐ.நா. மற்­றும் அமெ­ரிக்­கா­வின் காலில் தஞ்ச மடையத் தொடங்கியுள்ளனர்.

தவற விடாதீர்கள்:  மைத்­தி­ரி­யின் கோட்­டை­யில் மகிந்த அணி முதல் வேட்­பு­மனு!

You might also like