அமெரிக்க அதிகாரி இலங்கைக்கு புத்திமதி

சீனா­வு­டன் இணைந்து செயற்­ப­டும் போது ஒவ்­வொரு நாடும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும். இவ்­வாறு அமெ­ரிக்­கக் கடற்­ப­டை­யின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான றியர் அட்­மி­ரல் டொனால்ட் டி கப்­ரி­யேல்­சன் தெரி­வித்­தார்.

இலங்­கை­யில் சீனா­வின் பிர­சன்­னத்தைப் பற்றி அமெ­ரிக்கா கவலை கொண்­டுள்­ளதா என்று இலங்கை வந்­துள்ள றியர் அட்­மி­ரல் மொனால்ட் டி கப்­ரி­யேல்­ச­னி­டம் கொழும்பு ஆங்­கில ஊட­கம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தது.

சில விட­யங்­க­ளில் சீனா வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் செயற்­ப­டா­த­தால், சீனா­வு­டன் இணைந்து செயற்­ப­டும் போது ஒவ்­வொரு நாடும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும். சீனா தற்­போது நன்­மை­களைப் பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் அமைப்பு முறையை மறு­சீ­ர­மைக்க முயல்­கி­றது. இது கவ­லை­ய­ளிக்­கி­றது – – என்­றார்.

தவற விடாதீர்கள்:  ஆச­னப்­பங்­கீட்­டில் கஞ்­சத்­த­னம் - முற்­போக்­குக் கூட்­டணி தனி­வழி!!

You might also like