வடக்கு நாளை முற்றாக முடங்கும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

19 அமைப்புக்கள் கூட்டாக இணைந்து முழு அடைப்புக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அனைத்து மக்களும் முழு அடைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவை கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கைதிகள் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்த வடக்கு நாளை முற்றாக முடங்கும் என்றும் அவை தெரிவித்தன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு சட்டரீதியான விடயம் என்பதைக் கடந்து விட்டது. நியாயத்தின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஓர் விடயமாக மாறியுள்ளது.

நாளைமறுதினம் (சனிக்கிழமை) அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் தாமதமற்றுத் தீர்வு காண வேண்டிய இந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்காக நாளை வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தை மேற்கொள்ள தமிழ் மக்களை உரிமையுடன் அழைக்கின்றோம் என்று அந்த அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

அவசர தேவைகள் தவிர்ந்த ஏனையை செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தி முழு மனதோடு – நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு எமது ஆத்ம பலத்தைக் கொடுப்போம் என்றும் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புபட்டவை:

You might also like